Skip to main content

Posts

Showing posts from 2017

தீர்க்கம்

கோவிலில் மட்டும் பக்தி யாசகன் பார்வையில் மட்டும் கருணை தாகத்தில் மட்டும் நீர் சந்தோசத்தில் மட்டும் ஆசை உறக்கத்தில் மட்டும் கனவு அஃதே ஆதியும் அந்தமும் தீர்க்கமானபின் இடை இடையேதான் இந்த தர்க்கம்

நெட்டி முறித்தேன் குருவி கூட்டில்

கொட்டி தீர்த்த மேக கூட்டங்களின் எல்லை கோடுகளை எட்டி பார்த்துக்கொண்டே சிட்டு குருவிகளும் சில கதைகள் பேசியதே வெட்டி எடுத்து கொண்டு வெள்ளென வீடு போனால் சாதம் வடிக்க கூடும் என்றே சுமையை தலைக்கு ஏற்றி கொண்டாள் வாடி நின்றதெல்லாம் வண்ணமயமாக உலவ கண்டு கண்கள் கிள்ளியதே அதை பார்த்து நகலெடுத்தேன் பாட்டொன்று மெல்லிசையாய் காற்றில் கசிந்ததுவே பல ஆண்டுகள் ஆகுமடி பல்லவி புரிவதற்கு சாகசம் செய்யாதே சில காலங்கள் பிறை நிலவே சேவல் கூவியதே பொழுது புலர்ந்ததுவே மாற்றம் தேவையில்லை மார்க்கம் உள்ளதடி

நிகழ் கால உளவாளி

இவையாக இழந்து விட்டேன் இமைக்க கூட மறந்து விட்டேன் வகையாக வண்ண மயில் தோகையிலே மழை மேகம் கருக்கள் கண்டேன் மழை தானோ என்று எண்ண மனம் இங்கு மங்கியதே வெறும் மேகமென்று எனை சொல்லி ஆற்றி விட்டு மென்மேலும் கதை சொல்லி மழுப்பிக்கொண்டே கடந்து விட்டேன்

உயிலான்

சில்லறை கல்லறை ஊர் கூடி ஓலமிட்டு காவேரி நதி போல கண்ணீரை கடன் வாங்கி ஓர் நாள் முழுவதும் உன் பெருமைகளை மட்டுமே பாட்டுரைத்து பல்லக்கிலே பவனி வைத்து பிரிந்திருந்த சொந்தங்களை சேர்த்து வைத்து நிஜமாக சென்று விட்டாய் ஒற்றை வழி மார்க்கத்திலே இன்று முதல் உன் கனவுகளை சுமப்பதென்று கண்ணீருடன் கையில் பந்தமிட்டேன் கடைசி வரை நம்பவில்லை நீயின்றி ஒரு உலகை

எழுமின்

மௌனமான சில சபதங்கள் மயக்கமான சில கனவுகள் சுவடு படிந்த சில கடற்கரை பயணம் வளைந்த ஏழு வண்ண கோடுகள் எதையோ வரைந்து போன மேக தூவல்கள் முக்கோண மாலை வேளை பறவைகளின் அணிவகுப்பு எந்தன் எழுமின் நினைவுகள்

குளிக்க பயம்

கங்கையிலே கண் கலங்கினேன் நடுநிசி சூரியனே கொல்லென்று உமிழ்ந்து தள்ளுகிறாய் ஒரு படிக்கட்டு சாட்சி பறவைகளோ வெந்நீர் குளியளில் தள்ளாடியே பல கூட்டம் விரக்தியில் சில கூட்டம் விளிம்பில் சில கூட்டம் கண் திரித்தேன் கா கா வென ஒரு கூட்டம் பின்னே தெரியாத மொழியில் துதி பாடும் ஒரு கூட்டம் கடவுளென சிறப்பு கட்டண வழிபாட்டில் சில கூட்டம் கர்வத்தில் கண் மறைந்த சில கூட்டம் அரிதாக இதற்கிடையே கொல்லென சிரிக்கும் பிஞ்சுக் கூட்டம் கடவுள் இருக்க வாய்ப்பிருக்கு கர்ப்ப கிரகத்தில் அல்ல கண்டு கொள்

சற்றே முன்பு

பள்ளி வளாகம் பலவாறு சிந்தனைகளில் முந்தி கொண்டாய் நீ உன் தெரு முனை பார்வையில் நான் பல காதம் பயணித்தேன் அதில் சில நூறு சறுக்கல் வேறு வேகம் எடுக்கும்போது எந்தன் நெஞ்சம் கொஞ்சம் நிதானம் தப்பியதே தெரியும் உனக்கு அதனால் தான் எனை தெரியும் எனக்கு மனதில் ஊஞ்சலாடுகிறது கயிறு கட்டி தானாகவே

காலை உணவு

தேநீர் காலை உளுந்து வடை சில வேளை பு(ப)கை சில முறை பரபரப்பான சாலை ஓரம் சிந்தனைகள் நகர்ந்து வந்த பேருந்தின் ஜன்னல் ஓரம் விலகி கொண்டே தூரல் போட்டேன் இரண்டு முறை பருகி விட்டேன் பாவமென்று ஒரு முறையும் பழக்கமென்று ஒரு முறையும் மொத்தமுமாய் மூன்று முறை நனைந்துவிட்டேன் ஈரல் வரை நுகர்ந்துகொண்டேன் ஆறாம் விரலை வியாபாரம் சூடேற , பரபரப்பாய் கடைக்காரர் புன்னகைத்தார் காது வரை வாசம் கொண்டேன் வடை தனிலே மேற்கே ஒரு பெரிய திருப்பு முனை முன் தினத்தால் உருவான முச்சந்தி கடவுளுக்கு பூசைகள் ஒருங்கேற காலில் இட்டு நசுக்கி விட்டேன் கடை மேசையில் காலி பீங்கான் எண்ணெய் பிழிந்த தினசரி குப்பை பணப்பையை எட்டி பார்த்து சில்லறையை தேடி விட்டு சின்ன புன்னகையிலே கூறினேன் சற்றே நகர்ந்து யாசகனின் எதிரில் பட்டேன் பணப்பையை எட்டி பார்க்காமலே பொருமிக்கொண்டே கூறினேன் துவங்கியது ஒரு காலை

நிதர்சனம்

அந்தி மாலை வானம் அதிகப்படியான காரீயம் சின்ன வண்ண புள்ளி கோளம் பிஞ்சு கண்ண குழி ஓரம் சின்ன பூக்கள் பூக்கும் சில நாட்கள் தொடர்ந்து வீசும் காற்று கிழிக்க பட்டம் தன் கயிற்றை பற்றி நிற்கும் மேகம் திரண்டு வந்து பேசும் அது சோக கதையாக வேண்டும் மின்னல் வந்து கண் கூசும் பல யுகங்கள் அரங்கேறும்

மாதரம் விளக்கம்

கலர் கனவுகள் - லட்சியம் காரிருள் மழை மேகம் - விலங்கு மான் கலங்கிப்போன பல்லாங்குழி - ஓடையில் கோடை பஞ்சுமிட்டாய் பக்குவம் - பால் மனம் பெருக்கெடுக்கும் மலர் வாசம் - மண மேடை சிந்திக்காத குரங்கு - குடும்ப தலைவன் சில்லறை கடவுள் - பூசாரி மாசமான மார்கழி - பனிமலர் மருந்துண்ட சர்ப்பம் - அதிகாலை குயில் மனசாட்சியோடு நிரபராதி - கோயில் யாசகன் மக்கிப்போன மண்டையோடு - கல்லறை வெட்டியான் வலைந்துபோன வானவில் - பச்சை மிளகாய் வசதியான ஜன்னல் காற்று - நாற்காலி வண்ணமில்லா ததொரு பட்டுப்பூச்சி - கடிதம் சல்லடையான சட்டை பை - இதயம்

வந்தே மாதரம்

கலர் கனவுகள் காரிருள் மழை மேகம் கலங்கிப்போன பல்லாங்குழி பஞ்சுமிட்டாய் பக்குவம் பெருக்கெடுக்கும் மலர் வாசம் சிந்திக்காத குரங்கு சில்லறை கடவுள் மாசமான மார்கழி மருந்துண்ட சர்ப்பம் மனசாட்சியோடு நிரபராதி மக்கிப்போன மண்டையோடு வலைந்துபோன வானவில் வசதியான ஜன்னல் காற்று வண்ணமில்லா ததொரு பட்டுப்பூச்சி சல்லடையான சட்டை பை

இயற்கை சாட்சி

சாலையின் ஓரமெல்லாம் சில தூரல்கள் ஒன்று கூடி ஓடங்கள் உருவாக்கி கலையாத குப்பையெல்லாம் கப்பலாக மிதக்க விட்டு கடலில் சேர்க்க முனைந்ததுவே காரிருள் மேகமொன்று இதைக்கான தனக்கான நிறத்தையும் இழந்ததுவே வனத்துக்குள்ளே வந்ததுபோல் மரமெல்லாம் மகிழ்ந்தனவே துப்பரவுக்கு வேலை மிச்சம் ஒரு அதிகாலை சாட்சியாக குடையோடு கை குலுக்கி சென்றேன்

சில்லறை பூக்கள்

பால் மணமி ல்லா பாலைவன பொம்மை புன் சிரிப்பில் பரிகசிக்க பசியோடு தாகம் கண்ணில் சொருகுதடி மனதில் கணம் கூடுதடி கண்ண குழிகளிலே நீரோடை இருந்ததற்கு உப்பு நீர் சுவடுகள் உள்ளதடி கண்ணீர் கூட கடனானதடி மெய்யான தீபாவளி ஆடைகளை பொத்தலோடு போர்த்தியிருந்த காட்சியடி நிர்வாணம் நானானேன் பாழ்பட்ட காலணிகள் சேராத சோடியிலே பாதங்களாய் எண்ணி பார்த்தேன் நெருடல்கள் நெஞ்சுக்குள்ளே நீங்காமல் நிறைகிறதே கரை புரண்ட கங்கை நதி கண்ணில் மட்டும் போதாது ஆண்டவரே ஏன் இப்படி என்றெல்லாம் எண்ணுவதும் , சாபமென்று கூறுவதும் கடவுள்கள் வேலை சிறிதேனும் மனிதம் செய்வோம்

நடையில் கிழார்

காலியான சட்டைப்பையின் சுவடு முகத்தின் ஓரத்தில் ஒளிந்திருக்க நடையை வேகம் கூட்டினார் , பாலு . இந்த சாலையின் வேகத்தில் சில நேரங்களில் தடுமாறிப்போயிருக்கிறார். விர்ரென்று ஒரு மகிழுந்து அதன் திரையை விலக்கி உரிமையாளரை காட்டியது தயக்கமான உரையில் வழி கேக்க, பெரும்பாலும் வாகனங்கள் வழி கேட்பது காலாற நடப்பவனிடம்தான் ஒரே சைகையில் வழி காட்டி விட்டு நகர்ந்தார் பாலு . வந்தவர் வழி கேட்டதும் , இப்போது பாலு பயணப்பட்டிருப்பதும் ஒரே இடம் தான் ...

வெர்னியர் காளிப்பர்

கடல் வானம் நிறம் மாறும் வரை கரை ஓரம் காத்திருந்தேன் கப்பல் கட்டும் தளமொன்று கட்டெரும்பாய் கண்ணில் பட சில நேரம் சிறு வண்டாய் கண்களை துருவி பார்த்தேன் வானத்தில் வெள்ளையிலே பொட்டொன்று மெதுவாக மலர்ந்தது கண்டு சில நேரம் என் பார்வையை திருப்பி விட்டேன் செய்தி ஒன்றுமில்லையடி சில நேர அனுபவத்தை மையிட்டு மடக்கி வைத்தேன்

காற்றில் விதை

நந்தவனம் கடந்துவிட்டேன் கொள்ளிடை காட்டுக்குள்ளே பந்தமிட்டு நடு இரவில் ஓராயிரம் ஓலங்களில் சப்தமில்லா நடுக்கத்தில் நித்திரையை தொலைத்துவிட்டேன் ஒத்தையடி பாதையடி ஒய்யாரம் இல்லையடி  நடு நடுவே திக்குற்றேன் கூட வருவது யாரென்று கேட்டுக்கொண்டே அழகான திருப்புமுனை  அதன் நடு வாயில் பச்சை பட்டாடை அதன் வனப்பினிலே  விழி இரண்டை விதைத்து வைத்தேன் காய் மட்டும் புளிக்குமடி இங்கு கனிகூட விலக்கில்லை பசியாற உண்டபின்பு  தீ மூட்டி நித்திரையில் மையலுற்றேன் விடிந்த போது வீட்டின்  படுக்கையறை கண்ணாடியில்  பூதம் கண்டேன் கனவெல்லாம் கருப்பு வெள்ளை  நிறம் தெரிந்தால் என்ன செய்ய

மிக சிறப்பு

அத்துணையும்  ஒரு சிறப்பான மேடை பேச்சுக்கு மெருகேற்றும் நண்பா உனது தோல்விகள்தான் உனக்கு சிறந்த பாடம் கவணில் கடைந்து விடாதே நிஜத்தில் நிலைத்து விடாதே காகிதமும் கோபுரமும் படை மாற்றி  அணி மாற்றி அலைக்கழிக்கும் மிரண்டு விடாதே மானல்ல நீ மருவி விடாதே பருவமல்ல நீ

சிந்தனை துளி

பதில் கிடைக்காத கேள்விகளுக்குண்டான பதில் ஒரு நீண்ட பயணத்தில் கிடைத்து விடும். உங்கள் சுயசரிதை யாரோ ஒருவருக்கு சரித்திர பதிவு நிச்சயமாக, அதன் ஒவ்வொரு பக்கமும் அவருக்கு அனுபவமாக இருக்க வேண்டும் மேகத்துக்கும் வானத்துக்கும் வண்ணங்களை வரைந்தவன் ஒரு சிறந்த ஓவியன் குருதிக்கும் வறுமைக்கும் வண்ணங்களை வரைந்தவன் ஒரு வாடகை கூட்டாளி ஞாயிரென்று பெயர் வைத்து அன்று விடுமுறையாம், ஆதவன் என்றாவது விடுமுறை எடுத்ததுண்டா நிலவுக்கு பாட்டி சென்றாலோ இல்லையோ தாத்தா மட்டும் கண்டிப்பா போகலை நடத்துனர் , யாசகம் கேட்பவன் , கடவுள் - என்னிடம் சில்லறை இல்லை என்பதை ஞாபக படுத்துபவர்கள்

சில நேரங்களில் பெரும்பாலும்

மழையும் இசையும் மனதை நனைத்து விட்டு செல்லும் வெள்ளபெருக்கு சில நேரங்களில் வெளியில் தெரிந்து விடும் வடிந்த நீர் சில நேரங்களில் வயல்களில் பாயும் கன்னத்தில் விளைச்சல் சில நேரங்களில் அதிகமாக இருக்கும் அறுவடை காலம் பெரும்பாலும் காலனுடைய சாட்சியம் இல்லாமல் இருக்கும்

கொடுங்கோல்

என்னுடைய ஒரே ஆறுதல் மாறாத வடுக்களை அவனுக்கு பரிசாக அளித்ததில் எனக்கு பெரும்பங்குண்டு நினைவுக்கு வருவதெல்லாம் இன்றளவும் இடறுதடி உனைப் போல் எனக்கின்னொரு பேரிழப்பேதய்யா கேளிக்கை கூத்தெல்லாம் இன்று நினைவுகளில் மட்டுமே உளவுதடி அனுமதியில் எனை முந்திக்கொண்டாய் பிறப்பிலும் இறப்பிலும் என்னருமை சகோதரா|

கண்ணீரின் வேள்வி

கலயம் கொதித்திருந்தால் நெருப்பு அணைந்திருக்கும்... கொஞ்சம் கருணை இருந்திருந்தால் காலன் ஒதுங்கியிருக்கும் நிலவில் நின்றென்ன பயன் நீளக்கடல் அளந்தென்ன பயன் யாகம் வளர்த்தென்ன பயன் மாளிகையில் மந்தாரமென்ன பயன் பூனைக்கு சுட்டதினால் மாந்தர்க்கு ஒவ்வாதோ கற்களை கரைத்தென்ன பயன் வீணாக்கி களைந்தென்ன பயன் மனிதம் காத்து மறவாய் தமிழா ...

சுய தம்பட்டம்

இதோ என்னுடைய சுய தம்பட்டம் தேனென்று சொன்னாலே இனிக்குமென்பேன் எதுகையு மோனையு மருளிய தென்பேன் சொலவடையு மிலக்கியமு மியன்ற தென்பேன் பொதுமறையு மிந்த பிரபந்தமு மிண்டிய தென்பேன் அறமென்பேன் வீரமென்பேன் அனைத்துயிரு மோதும என்பேன் கடந்து உள் செல் என்பேன் கடவுளெ ன்பேன் உயிரெ ன்பேன் மெய்யென்பேன் உயிர்மெய்யெ ன்பேன் பாரதிக்கு தெரிந்த தென்பேன் அவ்வைக்கு அறிந்ததெ ன்பேன் வள்ளுவன் வடித்ததெ ன்பேன் விளக்கென்பேன் எண்ணையென்பேன் விளக்கெண்ணையென்பேன் மலரென்பேன் மலரும லரும் மாலையென்பேன் நான் சுவைத்தது இவ்வளவே யென்பேன்

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்

கனவு கண்டேன் தோழி

கனவு கண்டேன் தோழி பூ வனங்கள் மனம் வீச கண்டேன் மயிலாடும் மலைகள் கண்டேன் மயிர் கூச்செறியும் மரங்கள் கண்டேன் கொத்து கொத்தாய் கனிகள் கண்டேன் மண் வாசம் வீசும் வயல் வெளிகள் கண்டேன் வற்றாத கேணி கண்டேன் போர் அடிக்கும் சீருடை கண்டேன் பண்டிகையில் பாசம் கண்டேன் கண்ணீர் வடிக்கும் மேகம் கண்டேன் இறுதியில் விவசாயியின் சிரிப்பை கண்டேன் விடிந்தே போனது தோழி கண்டதெல்லாம் கனவில்லை கடந்தே போய்விட்ட பாதையடி நான் கலங்க கலங்குகிறாயோ தோழி இந்த வடு இருந்திருந்தால் அவன் கலங்க இந்த வானம் கலங்கியிருக்குமே அதெப்படி குறை அனைத்தும் இங்கிருங்க உனை வசைந்து என்ன பயன் சில நாட்கள் உணர்வோடு

டிக் டிக்

உண்மைகள் முளைக்கும்போது இனிக்கும் என்பது தெரிவதற்குள் பொய்கள் விதைக்க படுகின்றன கனவுகள் விடியும்போது நிகழும் என்பது தெரிவதற்குள் கலைக்க படுகின்றன

ராஜாங்கம்

எனது ராஜாங்கம் சரிந்ததடி உன் கட்டளைகள் பிறக்கும்போது எனது உலகம் உனது பார்வையில் புதியதாக விரியுதடி வாரி அணைக்க வழியெங்கும் கோளமிட்டேன் அணைக்கையிலே உள்ளம் உருகினேன் அத்தனை ஓவியங்களும் உன் ஒரு முக பாவனையில் உயிர்பெற்றாயிற்று சில காலம் நீ என் தோளில் பல காலம் நான் சென்று விட்டேன் பின்னே

சாரல் மழை

உண்மைகளை தேடுவதற்குள் ஏதோ ஒரு பரபரப்பான சூழலில் கட்டுண்டு வந்த காரணமோ போகும் காரணமோ தெரிவதற்குள் வழி மாறி மாறி பயணத்தில் கட்டணமின்றி ரத்தமும் இருக்கும் சதையும் இருக்கும் மமதையில் மதி மயங்கி கழித்து விடுவோம் நீயும் நானும் இடையில் வந்த சாரல் மழை

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

கண்மணித் துளியே

கண்மணியே கதை கேளாய் கண்மணியே துயில் கொள்ளேன் கண்மணியே சிணுங்காதே கண்மணியே களித்து மகிழ் கண்மணியே என் ஆவியடி கண்மணியே பயக்காதே கண்மணியே உனக்கு சிரிப்பு வரும் கண்மணியே அதில்தான் என் ஏக்கமுண்டு கண்மணியே இமை திறந்தாய் கண்மணியே நான் கண்டேன் புது உலகை கண்மணியே நீ வாய் திறந்தால் கண்மணியே எனக்கொரு புது மொழி கேக்குதடி

சாகசம்

எனை போற்றி எனை வாழ்த்தி அனுப்பி வைத்தாள் கண்ணம்மா வழக்காடும் உரிமையெல்லாம் எனக்காக எடுத்து கொண்டாள் கண்ணம்மா பண்டிகையில் பரிமாறி பட்டினி இருந்தால் கண்ணம்மா தலை குனியாமல் எனை நிமிர வைத்தாள் கண்ணம்மா தடுமாறும் வேளையெல்லாம் என் கலக்கத்தை கண்டு கொண்டாள் கண்ணம்மா நிறை மாதம் முதல் இன்று வரை எனை சுமந்து கொண்டாள் கண்ணம்மா உனை இன்றி என் வாழ்நாளை நான் நகர்த்துவது இயல்பில்லை இது போல ஒரு சாகசத்தை நான் காண போவதுமில்லை

வாசல் திறக்கட்டுமே

எம் பெருமை எம் தேசம் வேளாண்மை விவசாயம் நீரும் வேண்டும் சோறும் வேண்டும் களிந்திருக்க சில நேரம் வேண்டும் அனைத்தறியும் சமூகமே பின் எப்படி விளைச்சலை மறந்தாய் பட்டுடுத்தி படையலிட்டு பல காலம் வாழ்ந்து வந்தாய் திடீரென்று சில நாளில் கலாச்சார அழிவென்றாய் புரிந்துகொள்ளேன் என் மனங்களே வீடு இருக்கும் தைரியத்தால் வில்லாக வளைந்து விட்டால் நாளை உன்னை காடு வரை சுமந்து செல்ல ஒரு சனமும் இருக்காதே உன் வாழ்க்கை உன் கையில்

வாசல் திறக்கட்டுமே

எம் பெருமை எம் தேசம் வேளாண்மை விவசாயம் நீரும் வேண்டும் சோறும் வேண்டும் களிந்திருக்க சில நேரம் வேண்டும் அனைத்தறியும் சமூகமே பின் எப்படி விளைச்சலை மறந்தாய் பட்டுடுத்தி படையலிட்டு பல காலம் வாழ்ந்து வந்தாய் திடீரென்று சில நாளில் கலாச்சார அழிவென்றாய் புரிந்துகொள்ளேன் என் மனங்களே வீடு இருக்கும் தைரியத்தால் வில்லாக வலைந்துவிட்டால் நாளை உன்னை காடு வரை சுமந்து செல்ல ஒரு சனமும் இருக்காதே உன் வாழ்க்கை உன் கையில்

கசப்பு மிட்டாய்

கடைத்தெருவில் கைப்பிடித்து மாலையிலே நடந்து சென்றேன் என் தந்தையுடன் ... வீட்டிலே கொதித்து விட்ட கலயத்தை அவர் பாய்ச்சலில் தெரிந்து கொண்டேன் ... கடையை வந்து சேர்ந்த உடன் கேட்டு விட்டேன் எனக்கு பிடித்த பஞ்சு மிட்டாயை ... கடைக்காரனுக்கு பல காலம் கடன் பாக்கி ... ஒருபாடு எனக்காக வாங்கி தந்தார் ... கடைசியாக கணக்கு பார்த்து காசு கேட்டார் கடைக்காரன் ... அவர் பதில் சொல்ல தயங்கி நின்று வாய் திறப்பதற்க்குள் ... பஞ்சு மிட்டாய் கசந்ததுவே

கசப்பு மிட்டாய்

கடைத்தெருவில் கைப்பிடித்து மாலையிலே நடந்து சென்றேன் என் தந்தையுடன் ... வீட்டிலே கொதித்து விட்ட கலயத்தை அவர் பாய்ச்சலில் தெரிந்து கொண்டேன் ... கடையை வந்து சேர்ந்த உடன் கேட்டு விட்டேன் எனக்கு பிடித்த பஞ்சு மிட்டாயை ... கடைக்காரனுக்கு பல காலம் கடன் பாக்கி ... ஒருபாடு எனக்காக வாங்கி தந்தார் ... கடைசியாக கணக்கு பார்த்து காசு கேட்டார் கடைக்காரன் ... அவர் பதில் சொல்ல தயங்கி நின்று வாய் திறப்பதற்க்குள் ... பஞ்சு மிட்டாய் கசந்ததுவே

நெரிசல் பூ

சிறிதே கண் இமைகளில் நீர் வரும்வரை இளவெயில் ஒன்று எனை சிறகடிக்குதே கதைக்களம் ஒன்று இடைவெளியின்றி எனை நகர்த்துதே கடும் குளிரிலும் கடல் அலையினை கடந்தொதுங்கிடும் பரவச நிலை பல தெரியுதே|

பிம்பம்

பிம்பங்களில் புன்னகைத்தேன் சில நேரம் செவி மடுத்தென் பறவைகளின் மொழியறிந்தேன் காகிதத்தில் மையிட்டேன் கடலளவு வர்ணித்தேன் கவிதைதானடி நீ எனக்கு காற்சிலம்பு நான் உனக்கு நித்திரையில் கனவு கண்டேன் கனவினிலே நிலவு கண்டேன் நெஞ்சினிலே வேள்வியொன்றை எண்ணையூற்றி வளர்த்திருந்தேன்

நெரிசல் பூ

சிறிதே கண் இமைகளில் நீர் வரும்வரை இளவெயில் ஒன்று எனை சிறகடிக்குதே கதைக்களம் ஒன்று இடைவெளியின்றி எனை நகர்த்துதே கடும் குளிரிலும் கடல் அலையினை கடந்தொதுங்கிடும் பரவச நிலை பல தெரியுதே|

மறு பிறவி

அழகாய் போனதடி இவ்வுலகம் உன்னுடனே புதிதாய் தோனுதடி என்னுணர்வும் அதிகாலை கதிரவனுக்கும் அரைச்சந்திர நிலவுக்குமுள்ள இடைவெளிகள் நீளுதடி முத்துச்சிதறும் புல்வெளியும் முளைத்தேவிடாத விதைகளும் இயற்க்கையாக விளங்குதடி சிறு குழந்தையின் சிரிப்பிலே மனநோயிலிருந்து மரணித்தேனடி சிறிதே காலம் என் கருவறையில் சிற்பமாக இருந்துவிட்டாயடி அழகாய் போனதடி இவ்வுலகம்

தேநீர் கனவு

கண்ணம்மா கால சக்கரத்தில் உன்னை கடுகளவே விரித்து வைத்தேன் கண்ணம்மா என் நாள் அத்தனையும் உன் புன்னகைதான் பூஜித்தது கண்ணம்மா மறுகணமும் மறுபொழுதும் இல்லாமல் போனதினால் கண்ணம்மா உன் மனம் விரும்பும் கள்வனாய் கூட வாய்ப்புகள் கிட்டவில்லை கண்ணம்மா கல்லறை வரை கணக்குமடி கண்ணீர் விட காரணம் இல்லையடி கண்ணம்மா எனக்கு மட்டும் அனுமதி கொடு அதை மட்டுமாவது வைத்து கொண்டு கண்ணம்மா கழிந்து விடும் என் நொடி பொழுது

எனது தேசம் எனது பிரகடனம்

முதலுதவியில் கிடைத்த மூன்று நச்சு குப்பிகள் எமக்கானது மட்டுமல்ல... எம் சமூகத்தின் சகிக்க முடியாத இன்னல்கள் ஆயுத போரை நியாயப்படுத்தின... முன்னே தெரிந்த ஒரே வழியும் என் இடம் சேராது என தெரிந்தும் பயணத்தை தொடர்ந்தோம்... சில சதிகளும் சூழ்ச்சிகளும் எமது சமூகத்திற்கு எதிராக போர் தொடுத்தன... வழியிலே விடை பெறுகிறேன் வீழ்வேனென்று நினைத்தாயோ ...

வாழையடி வண்ணமீன்கள்

அத்தனையும் பொய்த்ததுதான் அலை கடலும் வறண்டு விடும் இனி மாறும் நிலை மாறும் காட்சிகளில் கதை மாறும் சிறு வண்டு சிறகடிக்கும் பறவைகளும் களைத்து ஒதுங்கும் நிழல் போல ஒன்று உண்டு காவியங்கள் உருவாகும் அன்றறிவாய் ஆறறிவு ஜீய்விகளே இயற்க்கை அன்னையின் சமாதியிலே இன்னொரு உலகம் தேடினாலும் உனக்கு இல்லை சுக வாழ்வு விழித்து கொள் என் இனமே

தீபாவளி கசப்புகள்

உனக்கென்று பண்டிகையுண்டா எனக்காகவே எதையும் செய்ய, இன்றெனக்கு சுவைக்குதடி தீபாவளி இனிப்புகளின் கசப்புகளை மறக்காமல் காத்து வைப்பேன் அடுத்த முறை அவகாசம் கிடைக்கும் வரை சில்லறையில் சில நாட்கள் , அது என் கல்லறை வரை கணக்குமடி எப்படி செய்வேன் உனக்கு கைமாறு யென்று

குறுதிக் காடு

நெல்லுக்கும் வயலுக்கும் வாரி வாரி இறைத்த நாட்கள் போய் நிவாரணம் பெற நிற்கதியாய் திருவோடை ஏந்த வைத்தாய் நிலை மாறும் ஒரு காலம் இது என்னுடைய நிலை இல்லை வருங்காலம் பிரதிபலிக்கும் உணவின்றி நீரில்லை இப்போது,  நிலத்தையும் உரிமை கொண்டாட முடியவில்லை விளைச்சலுக்கென்று கடன் கேட்டேன் கருகிய பின் எனக்கெதற்கு ஜகம் அழியும் ஒரு காலம் பாரதியின் கூற்றுப்படி எல்லாமே சூழ்ச்சிகள் தான் , தன் மானம் என்னை கொள்ள , மூச்சிற்கு என்ன பயன் புரிந்து கொள்வாய் சமூகமே ...

நெஞ்சிருக்கும் வரை

கேள்வி குறி வார்த்தைகளில் ஜாலமில்லை , எண்ணுவதால் வந்த பயன் , வாழ்க்கை எனும் வாக்கியத்தில் சில கோடிட்ட இடங்களை நிரப்பி விட்டாய் கடைசி வார்த்தை கேள்வி குறி ஆனதடி நிஜம் காலமில்லை கனவுமில்லை நினைவுகளை நான் இழக்க , இன்னொரு பார்வை போதுமடி சிலை எல்லோரா குகையில்லை ஆலமரம்தான் அதன் இருப்பிடமாய் சிற்பியில்லை கற்களுமில்லை , திடீரென உருவெடுத்தேன், சிலையாக ஒரு சிற்பத்தை கண்டவுடன்

தொகுப்பு

கூண்டு கிளி _____________ ஆவல் கொண்டேன் பறப்பதற்க்கு நீ விரிக்கும் சிறகை கண்டு பயிற்ச்சியில் சேரப்போனேன் பறவைகளோ பிரம்மிப்பில் அசரீரி _______ சொல்லவுமில்லை கேட்கவுமில்லை , முகமுமில்லை முகவரியுமில்லை , மலருமில்லை மாலையுமில்லை , நிஜமடி நீ எனக்கு . நீண்ட இடைவெளி என் மனதுக்கு போங்கி _________ எதற்க்கும் அஞ்சாய் எந்த கேளிக்கும் செவி கேளாய் எந்த தோல்விக்கும் துவளாய் உன்னால் முடியாது என்று ஏதுமில்லை உனக்கு வேண்டியதை செய் , ஒன்றையாவது முழுமையாக வாழ்க்கை என்ற சந்தர்ப்பத்தை புரிந்து கொள்வாய் இதுவும் கடந்து போகும் அனைத்தும் மறந்து போகும் லட்ச்சியத்தை மறந்து விடாய் கசப்பு மிட்டாய் _______________

என்னருமை பாரதி

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் தீரத்தில் பிஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ