Skip to main content

Posts

Showing posts from December, 2017

தீர்க்கம்

கோவிலில் மட்டும் பக்தி யாசகன் பார்வையில் மட்டும் கருணை தாகத்தில் மட்டும் நீர் சந்தோசத்தில் மட்டும் ஆசை உறக்கத்தில் மட்டும் கனவு அஃதே ஆதியும் அந்தமும் தீர்க்கமானபின் இடை இடையேதான் இந்த தர்க்கம்

நெட்டி முறித்தேன் குருவி கூட்டில்

கொட்டி தீர்த்த மேக கூட்டங்களின் எல்லை கோடுகளை எட்டி பார்த்துக்கொண்டே சிட்டு குருவிகளும் சில கதைகள் பேசியதே வெட்டி எடுத்து கொண்டு வெள்ளென வீடு போனால் சாதம் வடிக்க கூடும் என்றே சுமையை தலைக்கு ஏற்றி கொண்டாள் வாடி நின்றதெல்லாம் வண்ணமயமாக உலவ கண்டு கண்கள் கிள்ளியதே அதை பார்த்து நகலெடுத்தேன் பாட்டொன்று மெல்லிசையாய் காற்றில் கசிந்ததுவே பல ஆண்டுகள் ஆகுமடி பல்லவி புரிவதற்கு சாகசம் செய்யாதே சில காலங்கள் பிறை நிலவே சேவல் கூவியதே பொழுது புலர்ந்ததுவே மாற்றம் தேவையில்லை மார்க்கம் உள்ளதடி

நிகழ் கால உளவாளி

இவையாக இழந்து விட்டேன் இமைக்க கூட மறந்து விட்டேன் வகையாக வண்ண மயில் தோகையிலே மழை மேகம் கருக்கள் கண்டேன் மழை தானோ என்று எண்ண மனம் இங்கு மங்கியதே வெறும் மேகமென்று எனை சொல்லி ஆற்றி விட்டு மென்மேலும் கதை சொல்லி மழுப்பிக்கொண்டே கடந்து விட்டேன்

உயிலான்

சில்லறை கல்லறை ஊர் கூடி ஓலமிட்டு காவேரி நதி போல கண்ணீரை கடன் வாங்கி ஓர் நாள் முழுவதும் உன் பெருமைகளை மட்டுமே பாட்டுரைத்து பல்லக்கிலே பவனி வைத்து பிரிந்திருந்த சொந்தங்களை சேர்த்து வைத்து நிஜமாக சென்று விட்டாய் ஒற்றை வழி மார்க்கத்திலே இன்று முதல் உன் கனவுகளை சுமப்பதென்று கண்ணீருடன் கையில் பந்தமிட்டேன் கடைசி வரை நம்பவில்லை நீயின்றி ஒரு உலகை

எழுமின்

மௌனமான சில சபதங்கள் மயக்கமான சில கனவுகள் சுவடு படிந்த சில கடற்கரை பயணம் வளைந்த ஏழு வண்ண கோடுகள் எதையோ வரைந்து போன மேக தூவல்கள் முக்கோண மாலை வேளை பறவைகளின் அணிவகுப்பு எந்தன் எழுமின் நினைவுகள்