Skip to main content

Posts

Showing posts from November, 2017

குளிக்க பயம்

கங்கையிலே கண் கலங்கினேன் நடுநிசி சூரியனே கொல்லென்று உமிழ்ந்து தள்ளுகிறாய் ஒரு படிக்கட்டு சாட்சி பறவைகளோ வெந்நீர் குளியளில் தள்ளாடியே பல கூட்டம் விரக்தியில் சில கூட்டம் விளிம்பில் சில கூட்டம் கண் திரித்தேன் கா கா வென ஒரு கூட்டம் பின்னே தெரியாத மொழியில் துதி பாடும் ஒரு கூட்டம் கடவுளென சிறப்பு கட்டண வழிபாட்டில் சில கூட்டம் கர்வத்தில் கண் மறைந்த சில கூட்டம் அரிதாக இதற்கிடையே கொல்லென சிரிக்கும் பிஞ்சுக் கூட்டம் கடவுள் இருக்க வாய்ப்பிருக்கு கர்ப்ப கிரகத்தில் அல்ல கண்டு கொள்

சற்றே முன்பு

பள்ளி வளாகம் பலவாறு சிந்தனைகளில் முந்தி கொண்டாய் நீ உன் தெரு முனை பார்வையில் நான் பல காதம் பயணித்தேன் அதில் சில நூறு சறுக்கல் வேறு வேகம் எடுக்கும்போது எந்தன் நெஞ்சம் கொஞ்சம் நிதானம் தப்பியதே தெரியும் உனக்கு அதனால் தான் எனை தெரியும் எனக்கு மனதில் ஊஞ்சலாடுகிறது கயிறு கட்டி தானாகவே

காலை உணவு

தேநீர் காலை உளுந்து வடை சில வேளை பு(ப)கை சில முறை பரபரப்பான சாலை ஓரம் சிந்தனைகள் நகர்ந்து வந்த பேருந்தின் ஜன்னல் ஓரம் விலகி கொண்டே தூரல் போட்டேன் இரண்டு முறை பருகி விட்டேன் பாவமென்று ஒரு முறையும் பழக்கமென்று ஒரு முறையும் மொத்தமுமாய் மூன்று முறை நனைந்துவிட்டேன் ஈரல் வரை நுகர்ந்துகொண்டேன் ஆறாம் விரலை வியாபாரம் சூடேற , பரபரப்பாய் கடைக்காரர் புன்னகைத்தார் காது வரை வாசம் கொண்டேன் வடை தனிலே மேற்கே ஒரு பெரிய திருப்பு முனை முன் தினத்தால் உருவான முச்சந்தி கடவுளுக்கு பூசைகள் ஒருங்கேற காலில் இட்டு நசுக்கி விட்டேன் கடை மேசையில் காலி பீங்கான் எண்ணெய் பிழிந்த தினசரி குப்பை பணப்பையை எட்டி பார்த்து சில்லறையை தேடி விட்டு சின்ன புன்னகையிலே கூறினேன் சற்றே நகர்ந்து யாசகனின் எதிரில் பட்டேன் பணப்பையை எட்டி பார்க்காமலே பொருமிக்கொண்டே கூறினேன் துவங்கியது ஒரு காலை

நிதர்சனம்

அந்தி மாலை வானம் அதிகப்படியான காரீயம் சின்ன வண்ண புள்ளி கோளம் பிஞ்சு கண்ண குழி ஓரம் சின்ன பூக்கள் பூக்கும் சில நாட்கள் தொடர்ந்து வீசும் காற்று கிழிக்க பட்டம் தன் கயிற்றை பற்றி நிற்கும் மேகம் திரண்டு வந்து பேசும் அது சோக கதையாக வேண்டும் மின்னல் வந்து கண் கூசும் பல யுகங்கள் அரங்கேறும்

மாதரம் விளக்கம்

கலர் கனவுகள் - லட்சியம் காரிருள் மழை மேகம் - விலங்கு மான் கலங்கிப்போன பல்லாங்குழி - ஓடையில் கோடை பஞ்சுமிட்டாய் பக்குவம் - பால் மனம் பெருக்கெடுக்கும் மலர் வாசம் - மண மேடை சிந்திக்காத குரங்கு - குடும்ப தலைவன் சில்லறை கடவுள் - பூசாரி மாசமான மார்கழி - பனிமலர் மருந்துண்ட சர்ப்பம் - அதிகாலை குயில் மனசாட்சியோடு நிரபராதி - கோயில் யாசகன் மக்கிப்போன மண்டையோடு - கல்லறை வெட்டியான் வலைந்துபோன வானவில் - பச்சை மிளகாய் வசதியான ஜன்னல் காற்று - நாற்காலி வண்ணமில்லா ததொரு பட்டுப்பூச்சி - கடிதம் சல்லடையான சட்டை பை - இதயம்

வந்தே மாதரம்

கலர் கனவுகள் காரிருள் மழை மேகம் கலங்கிப்போன பல்லாங்குழி பஞ்சுமிட்டாய் பக்குவம் பெருக்கெடுக்கும் மலர் வாசம் சிந்திக்காத குரங்கு சில்லறை கடவுள் மாசமான மார்கழி மருந்துண்ட சர்ப்பம் மனசாட்சியோடு நிரபராதி மக்கிப்போன மண்டையோடு வலைந்துபோன வானவில் வசதியான ஜன்னல் காற்று வண்ணமில்லா ததொரு பட்டுப்பூச்சி சல்லடையான சட்டை பை