Skip to main content

காலை உணவு

தேநீர் காலை
உளுந்து வடை சில வேளை
பு(ப)கை சில முறை

பரபரப்பான சாலை ஓரம்
சிந்தனைகள் நகர்ந்து வந்த
பேருந்தின் ஜன்னல் ஓரம்

விலகி கொண்டே தூரல்
போட்டேன் இரண்டு முறை
பருகி விட்டேன்

பாவமென்று ஒரு முறையும்
பழக்கமென்று ஒரு முறையும்
மொத்தமுமாய் மூன்று முறை
நனைந்துவிட்டேன் ஈரல் வரை

நுகர்ந்துகொண்டேன் ஆறாம்
விரலை

வியாபாரம் சூடேற , பரபரப்பாய்
கடைக்காரர் புன்னகைத்தார்
காது வரை

வாசம் கொண்டேன் வடை தனிலே

மேற்கே ஒரு பெரிய திருப்பு முனை
முன் தினத்தால் உருவான
முச்சந்தி கடவுளுக்கு
பூசைகள் ஒருங்கேற

காலில் இட்டு நசுக்கி விட்டேன்
கடை மேசையில் காலி பீங்கான்
எண்ணெய் பிழிந்த தினசரி குப்பை

பணப்பையை எட்டி பார்த்து
சில்லறையை தேடி விட்டு
சின்ன புன்னகையிலே கூறினேன்

சற்றே நகர்ந்து யாசகனின்
எதிரில் பட்டேன்
பணப்பையை எட்டி பார்க்காமலே
பொருமிக்கொண்டே கூறினேன்

துவங்கியது
ஒரு காலை

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்