Skip to main content

Posts

Showing posts from June, 2018

வேண்டும் பவனி

கடிகார முள் மேலே ஒரு கனவு கண்டேன் கலையல்லவோ சிற்பியின் கலைவண்ணமே அதெப்படி காதலென்றா கும் ஒரு நூறு கோடி புல் மீது ஒரு பதினைந்து எறும்பு நடப்பதால் வலி யென்ன விழி நீரும் விலை போகாதே மனம் கோடி மலை உச்சி கடல் சுற்றி தனி தீவில் நீ எதை தேடுவாய் பகல் எல்லாம் பசுமை கோயிலெல்லாம் கடவுள் முயன்றவனெல்லாம் முட்டாள் பாலம் கட்ட அனில் வெட்டி வெட்டி வளர்ந்ததுவே முட்டி முட்டி முறைத்ததுவே தெரு முனை குழாய்

திண்ணை காவியம்

அன்பே , பச்சை தாமரையே பார்வை மாறவில்லை என்ன வேடிக்கை அது அர்த்தம் விளங்கவில்லை காட்டி கொடுப்பதெல்லாம்  என் சின்ன புன்னகையே கண்கள் ஆயுதமாய் உனக்கு அமைந்ததென்ன அதன் கூர்மை என்னை கொஞ்சம்  வதைத்து ஒதுங்கியதே காலை வேளையது  காயம் ஆறவில்லை அடுத்த மாலை வேளையிலும் வேட்டை துவங்கியதே வெள்ளம் ஆற்றினிலே உள்ளமெல்லாம் கரை தனிலே காற்றுக்கென ஒரு வேலி கண்டேன் சில வேளை கதவு கண்டேன் உள்ளே வர அனுமதிக்கும் ஒப்பனையை காணவில்லை ஒப்புக்கு ஒரு மாலை  தினம் தினமும் நகர்ந்ததுவே நாட்காட்டி யை கிழிக்க  மறந்துவிட்டேன்