Skip to main content

Posts

Showing posts from April, 2018

காற்று படுகை

மாலை வேளை ஒரு முன்னறிவிப்பில்லா மலை முகடுகளின் சாட்சியோடு கதிரவனின் கடைசி நிமிடங்கள் இன்று மட்டுமே தூர கிளைகளின் அசைவுகளின் இடையிடையே சீதையின் காதலன் கோலம் போட மறந்து விட்டான் போலும் வானம் கொஞ்சம் நீலத்தை களவு கொடுத்துவிட்டு மஞ்சளை கடன் வாங்கியிருந்தான் இன்னும் சில நிமிடங்களில் மஞ்சளும் கருப்பும் கை மாறும் வீடு நோக்கி முக்கோண வடிவத்தில் பறவைகள் எல்லாரையும் உறங்க சொல்லும் நான் கேட்பது நாளைக்கு உணவில்லை என்றென்ன அதற்கு கவலை இல்லை விடியலில் இறை தேட சிறகு விரிக்கும் மனதை தாரும் அனைவருக்கும் தினம் விரிப்போம் சிறகை
இயற்கையை தவிர இல்லையொன்றும் எழுத வெகு காலம் பிரிந்து பின் சேரும் கனவு கருப்பு வெள்ளை மனம் சொல்லும் போது மழை தூறல் வந்தால் இருப்பதே பிரிவு வேர் கண்ட பின்னே பழம் இனித்தது என்ன இது கொடுமை

மியாவ் மியாவ்

உன் பாதையை நீ மாற்றாத வரை பின் நோக்க வேண்டிய கட்டாயம் இல்லை - சாலை விதி வேகம் அதிகரிக்க கட்டை வண்டியும் காளை மாடும் களவு போனது - விருட்டென்ற பயணம் முழுவதுமாய் எரிந்து விட்ட தீக்குச்சி ஒன்று உன்னை பார்த்து சொல்லட்டும் முட்டாள் என்று ஏற்றுக்கொள் - தப்பே இல்லை முக்கால் மணி நேரம் மூங்கில் தழை வேய்ந்த கட்டாந்தரை போதும் - வேனல் காலம் படிக்க ஒரு வரி , பண்ணை மரத்தடி, மலை கூடும் கட்டி ஒலி நான் இன்னமும் கேக்கிறேன் அவள் பாத கொலுசொலி - கண்மணி