Skip to main content

Posts

Showing posts from May, 2018

தானியங்கி

கோலம் போட மறந்து விட்ட - புள்ளி மான் அவனொரு அரைகுறை புள்ளியே இல்லாத கோலம் அவள் - விதவை அவனொரு குற்றவாளி பாலைவனத்தில் ஒரு ஏமாற்றம் - கானல் அவனொரு ஏமாற்றுக்காரன் பிச்சைக்காரனை வாசலில் அமர்த்திவிட்டு உள்ளே- பாலபிஷேகம் அவனொரு கஞ்சன் கனவுகளில் மயங்கி போய் கருவிலே ஒரு நீண்ட உறக்கம் அவனொரு கொலையாளி இருந்தும் அவன் கடவுள் களம் புரிகிறதா

வெள்ளை புறா

நிலவோடு தினந்தோறும் சில நிமிடங்கள் - மௌனமாக அதன் தகதகப்பு போதும் சில தேசம் ஆக்கிரமிக்க - வீரமுடன் விடியல் வரை காத்திருப்போம் பனி மலரே - விலகிப்போக கோடி நாட்கள் வரம் இல்லை சாபம் தானே - இப்படியே வெள்ளை தாள் வைத்திருந்தேன் ஆறு விரல் சிந்தனையில் - மை இல்லை இல்லாவிடில் என்ன இப்போ  மௌனங்கள் மொழிகளாக  புரியும் வரை போர் இருக்கும் 

காந்தாரி

வேள்வி யெல்லாம் புகை நடன மாட - மயிலே மழை மேகத்திற்கு மட்டும் அள்ளித் தந்தாய் - குயிலே பால் வெளி மணலும்  கரையும் ஆயிரம் பொழியும் - சாரல் கண்டுமே காணவில்லை தானது மண்ணில் துுங்கியதி ல்லை - விதைகள் மனமும் சில நேரம் அப்படித்தானே 

தானம்

கங்கை கரை புரண்ட கண்களை கண்டதுண்டோ எண்ணெய் படாத எழில் கூந்தலை கண்டதுண்டோ பால் இருக்கும் மனதிலே பட்டினியோடு வயிற்றிலே பல தேசம் கடந்து வந்த சுவடுகள் அவன் காலிலே வெயிலுக்கு மட்டுமல்ல குளிருக்கு கூட அவனுக்கோரு சட்டையே நிர்வாணமாய் உளவிய சமூகத்தின் நடுவே ஒய்யாரமாய் ஒரு நடை வீறு கொள்ளடா உன் ஜனனமல்ல மரணம் ஒரு சரித்திரம்

நேற்று மழை இன்று மண் வாசம்

நல்ல மழை ஏரிகளை பிரதி எடுத்த நகர சாலைகள் விடுப்பு எடுத்த நடைபாதை கடைகள் பழைய துணியை துவைக்க போட்ட மரங்கள் இடையிடையே உற்சாகத்தில் மின் நூக்கிகள் சுத்தம் செய்ய ஒரு ஜன்னலை மீறிய காற்று மண்ணிற்கு கொஞ்சம் வாசனை திரவியம் தெளித்த வானம் நெரிசலில் திடீரென முளைத்த குடை வியாபாரிகள் சல சலப்புக்குள்ளே ஒரு பரபரப்பில் நகர் புற சாலை வேனல் காலத்தில் ஒரு வெள்ளி மழை குளிரும் மனமும் அந்த பச்சையம் கொண்ட மலரும்

மற்றொரு கனவு

வேகம் எடுத்தாலும் - நின்றுவிடும் இரவு மெல்லிய பார்வையது - வெட்ட வெளி குட்டி தீவு நடைபாதை அதிலொரு - கடையோர நாகரீகம் விலை கேட்காமல் விலகி நடந்தேன் - காண்பதெல்லாம் விற்பனைக்கில்லை கொட்டி தீர்க்க மழை மேகம் - கண்கள் சாட்சியோடு மொழி அறியா தேசத்திலே - தினம் ஒரு முறை பிரவேசித்தேன் கால்கள் கோனவில்லை காட்சியில் நீட்சி இல்லை காற்று வீசும் பாதை கிளைகள் வீழ்வதுண்டு சில பழங்களும் கிடைக்குமென்றால் நடப்பதை நடந்து பார்ப்போம் மெல்லிய பார்வையது - வெட்ட வெளி குட்டி தீவு

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே