Skip to main content

Posts

Showing posts from February, 2018

கண்ணீர் புறா

ஒரு உச்சி வெயில் சுட்டெரிக்கும் ஆதவனின் புன்னகையின் சாட்சியோடு ஒரு பத்து நிமிட போராட்ட காட்சி கானல் நீரை எனக்கு காட்டி கொண்டே இருந்தே தார் சாலையின் ஓரத்தில் கிழிந்த அங்கிகளுடன் ஒரு ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையுடன் நகர்ந்து வந்து கொண்டிருந்தாள் சற்று வந்தவுடன் ஒரு மறைவில் அவனை தூக்கி பிடித்துவிட்டு இறக்கி விட்டாள் அவள் தனியே தன்னை தூய்மை படுத்தி கொண்டு குழந்தையின் பிஞ்சு கைகளை பற்றிக்கொண்டு நடக்கலானால் அவளால் கூட நடக்க முடியவில்லை அவன் தனது வறண்டு போன இரண்டு கண்களையும் வேடிக்கை பார்க்க உருட்டி கொண்டே விருட்டென நடந்து கொண்டிருந்தான் அவள் முகத்தில் அடுத்த வேளை உணவுக்குண்டான கவலை கண்டேன் ஆனால் பிறை முகத்தில் ஒரு கலங்கமும் இல்லை அவள் நடையில் கடந்து வந்த கணங்களை கண்டேன் ஆனால் பால் நடையில் புதுமை கண்டேன் அவன் தார் சாலையின் வெப்பத்திற்கு புதியவனாய் , வெப்பம் தாளாமல் தன் பிஞ்சு கால்களை வேகமாக எடுத்து வைக்க அவளை முந்தியே சில நேரங்களில் சட்டென்று நின்று தன்னை மடியில் தூக்குமாறு கெஞ்சியும் பார்த்தான் அவன் அன்னையும் முயற்சித்தால் துணியே அணியாத இந்த பச்சிளம் குழந்தை