Skip to main content

Posts

Showing posts from 2018

சிற்பம்

கண்ணாடி ஓடு ஒரு கற்றை நிலவு ஓராயிரம் மின்னல் மனதிலுன் பிம்பம் கூச்செரியும் ரோமம் அங்கங்கே அலை உருவாகும் மனம் சில நேரம் பயணப்பட்டிருக்கும் அது ஒரு மழையில் அமிழாத மழலை காதல் கப்பல்

கத்திரி பூக்கள்

உந்தன் பெயர் கூட அறியாமல் ஒரு கோடி கடிதங்கள் உந்தன் இமைக்காத கண்கள்தான் அதன் முகவரி பக்கங்கள் மொழி கொஞ்சம் விளங்காமல் பரிமாற்றம் செய்ய வந்தேன் பல நாட்கள் இடி மின்னல் என் ஜன்னல் ஓரம் மழை சாரல் பரிமாற்றம் விளங்கவில்லை ஆனால் முகவரியில் மாற்றமில்லை சிலை போல காணவில்லை ஆனால் சில காலம் ஒவியனாய் வேடமிட்டென் விழும் மழை கூட புன்னகைத்தான் விளையாடு மாலை ஆச்சு மணம் கொண்ட மலர் எல்லாம் மனம் கொய்வதில்லை சில வெல்லாம் ஓரமாய் தூரமாய் கொள்ளை கொள்ளும் அவைக்காக அவளுக்காக

வெள்ளை கொக்கு

சிதிலம் அடைந்த வெண்ணிலவே - எனை வில்வம் கொண்டு வளைத்த தென்ன ஒரு கோப்பையின் கடைசி வசனங்களில் - மீண்ட அட்ச ரேகை அடையாளம் கொட்டி வைத்த குழப்பமெல்லாம் - கொஞ்சம் கண்ணக் குழிகளில் எடுத்தாலென்ன வாகனம் சன்னல் முகம் எண்ணம் யெல்லாம் வண்ணம் வீசும் ஒரு பூவாகை பிரவாகம் பின்புற மாக தலை குற்றி ஓடும் காவிரி மோகம் அலைபோலே கடல் வரை தேடும்

Dear Tear Deer

Oh Dear , Oh Deer Only Few Dots , Nothing Aparts Oh Dear , Oh Deer Vocal I See , Drawing I Hear Oh Dear , Oh Deer Only Where I Could See Happy Ending Stops Oh Dear , Oh Deer Kill me instead, hob into my chest Oh Dear , Oh Deer

நீர்க்கோலம்

கொள்ளிடக் கரை ஓரத்திலே குமரிகள் கண்டம் ஓடிக் கொண்டே உறங்கி கொள்ளும் ஆற்று வெள்ளம் அதன் ஆடை வீழ்ச்சிகளில் வானம் கூட ஏழு வண்ணம் பெருக்கெடுத்து சில தூரம் கோபம் கொள்ளும் பெரும்பாலும் வழி நெடுக பச்சை வாசம் கொள்ளும் தொழிற்சாலை கோரை பற்கள் தொடும் போது துரதிர்ஷ்டம் பின்னது பாயும் நிலமெங்கே காய்த்து தொங்கும் அது ஒரு நீர்க்கோலம்

கள்வனின் காதலி

திரும்பிய போது திசை மாறி போன மழை சாரல் ஓடம் தெருவின் பின் குறிப்பில் ஒன்றி போன வணிக விளம்பரம் ஆடி தள்ளுபடியின் இலவசத்தில் மலைத்து போன ஆனந்தங்கள் நேர் நேர் தேமா கொஞ்சம் குனிந்து பாருங்கள் நாங்களும் மனிதர்களே நடை பாதை நன்னிலம் தான் எங்கள் வீடு

சாரல் மழை மேகம்

நடை பாதை கூட கொஞ்சம் நகர்ந்து விட்டது சந்திரனும் கூட கோபம் கொண்டது மேகம் கூட கலங்கிவிட்டது காபி கூட கசந்து விட்டது விண்மீன்கள் கூட விரைந்து விட்டது ஒன்றே தான் உள்ளம் அறியேன் காவல் கொள்ளை காலம் கூட அறியேன் மின்னல் தானே முன்னாடி இடி எப்போதும் பின்னாடி பார்வை ஒன்றே போதுமடி பார்ப்போம் இடிக்குமா யென்று

கடவுச்சொல்

அமைதியாய் என்றே - பேசாதே என்றில்லை அன்பாய் என்றே - கோபிக்காதே என்றில்லை ஆசைப்படாதே என்றே - வெறுப்பாய் என்றில்லை சிரிக்காதே என்றே - முறைப்பாய் என்றில்லை கனவு என்றே - உறங்கேன் என்றில்லை விழிப்பாய் என்றே - உணர்வாய் என்றில்லை கடப்பாய் என்றே - மறவேன் என்றில்லை மனதால் என்றே - காமமில்லை என்றில்லை ஒளிதான் என்றே - ஒளித்து வை என்றில்லை கவிதை என்றே - காவியத் தலைவி என்றில்லை

வேண்டும் பவனி

கடிகார முள் மேலே ஒரு கனவு கண்டேன் கலையல்லவோ சிற்பியின் கலைவண்ணமே அதெப்படி காதலென்றா கும் ஒரு நூறு கோடி புல் மீது ஒரு பதினைந்து எறும்பு நடப்பதால் வலி யென்ன விழி நீரும் விலை போகாதே மனம் கோடி மலை உச்சி கடல் சுற்றி தனி தீவில் நீ எதை தேடுவாய் பகல் எல்லாம் பசுமை கோயிலெல்லாம் கடவுள் முயன்றவனெல்லாம் முட்டாள் பாலம் கட்ட அனில் வெட்டி வெட்டி வளர்ந்ததுவே முட்டி முட்டி முறைத்ததுவே தெரு முனை குழாய்

திண்ணை காவியம்

அன்பே , பச்சை தாமரையே பார்வை மாறவில்லை என்ன வேடிக்கை அது அர்த்தம் விளங்கவில்லை காட்டி கொடுப்பதெல்லாம்  என் சின்ன புன்னகையே கண்கள் ஆயுதமாய் உனக்கு அமைந்ததென்ன அதன் கூர்மை என்னை கொஞ்சம்  வதைத்து ஒதுங்கியதே காலை வேளையது  காயம் ஆறவில்லை அடுத்த மாலை வேளையிலும் வேட்டை துவங்கியதே வெள்ளம் ஆற்றினிலே உள்ளமெல்லாம் கரை தனிலே காற்றுக்கென ஒரு வேலி கண்டேன் சில வேளை கதவு கண்டேன் உள்ளே வர அனுமதிக்கும் ஒப்பனையை காணவில்லை ஒப்புக்கு ஒரு மாலை  தினம் தினமும் நகர்ந்ததுவே நாட்காட்டி யை கிழிக்க  மறந்துவிட்டேன்

தானியங்கி

கோலம் போட மறந்து விட்ட - புள்ளி மான் அவனொரு அரைகுறை புள்ளியே இல்லாத கோலம் அவள் - விதவை அவனொரு குற்றவாளி பாலைவனத்தில் ஒரு ஏமாற்றம் - கானல் அவனொரு ஏமாற்றுக்காரன் பிச்சைக்காரனை வாசலில் அமர்த்திவிட்டு உள்ளே- பாலபிஷேகம் அவனொரு கஞ்சன் கனவுகளில் மயங்கி போய் கருவிலே ஒரு நீண்ட உறக்கம் அவனொரு கொலையாளி இருந்தும் அவன் கடவுள் களம் புரிகிறதா

வெள்ளை புறா

நிலவோடு தினந்தோறும் சில நிமிடங்கள் - மௌனமாக அதன் தகதகப்பு போதும் சில தேசம் ஆக்கிரமிக்க - வீரமுடன் விடியல் வரை காத்திருப்போம் பனி மலரே - விலகிப்போக கோடி நாட்கள் வரம் இல்லை சாபம் தானே - இப்படியே வெள்ளை தாள் வைத்திருந்தேன் ஆறு விரல் சிந்தனையில் - மை இல்லை இல்லாவிடில் என்ன இப்போ  மௌனங்கள் மொழிகளாக  புரியும் வரை போர் இருக்கும் 

காந்தாரி

வேள்வி யெல்லாம் புகை நடன மாட - மயிலே மழை மேகத்திற்கு மட்டும் அள்ளித் தந்தாய் - குயிலே பால் வெளி மணலும்  கரையும் ஆயிரம் பொழியும் - சாரல் கண்டுமே காணவில்லை தானது மண்ணில் துுங்கியதி ல்லை - விதைகள் மனமும் சில நேரம் அப்படித்தானே 

தானம்

கங்கை கரை புரண்ட கண்களை கண்டதுண்டோ எண்ணெய் படாத எழில் கூந்தலை கண்டதுண்டோ பால் இருக்கும் மனதிலே பட்டினியோடு வயிற்றிலே பல தேசம் கடந்து வந்த சுவடுகள் அவன் காலிலே வெயிலுக்கு மட்டுமல்ல குளிருக்கு கூட அவனுக்கோரு சட்டையே நிர்வாணமாய் உளவிய சமூகத்தின் நடுவே ஒய்யாரமாய் ஒரு நடை வீறு கொள்ளடா உன் ஜனனமல்ல மரணம் ஒரு சரித்திரம்

நேற்று மழை இன்று மண் வாசம்

நல்ல மழை ஏரிகளை பிரதி எடுத்த நகர சாலைகள் விடுப்பு எடுத்த நடைபாதை கடைகள் பழைய துணியை துவைக்க போட்ட மரங்கள் இடையிடையே உற்சாகத்தில் மின் நூக்கிகள் சுத்தம் செய்ய ஒரு ஜன்னலை மீறிய காற்று மண்ணிற்கு கொஞ்சம் வாசனை திரவியம் தெளித்த வானம் நெரிசலில் திடீரென முளைத்த குடை வியாபாரிகள் சல சலப்புக்குள்ளே ஒரு பரபரப்பில் நகர் புற சாலை வேனல் காலத்தில் ஒரு வெள்ளி மழை குளிரும் மனமும் அந்த பச்சையம் கொண்ட மலரும்

மற்றொரு கனவு

வேகம் எடுத்தாலும் - நின்றுவிடும் இரவு மெல்லிய பார்வையது - வெட்ட வெளி குட்டி தீவு நடைபாதை அதிலொரு - கடையோர நாகரீகம் விலை கேட்காமல் விலகி நடந்தேன் - காண்பதெல்லாம் விற்பனைக்கில்லை கொட்டி தீர்க்க மழை மேகம் - கண்கள் சாட்சியோடு மொழி அறியா தேசத்திலே - தினம் ஒரு முறை பிரவேசித்தேன் கால்கள் கோனவில்லை காட்சியில் நீட்சி இல்லை காற்று வீசும் பாதை கிளைகள் வீழ்வதுண்டு சில பழங்களும் கிடைக்குமென்றால் நடப்பதை நடந்து பார்ப்போம் மெல்லிய பார்வையது - வெட்ட வெளி குட்டி தீவு

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

காற்று படுகை

மாலை வேளை ஒரு முன்னறிவிப்பில்லா மலை முகடுகளின் சாட்சியோடு கதிரவனின் கடைசி நிமிடங்கள் இன்று மட்டுமே தூர கிளைகளின் அசைவுகளின் இடையிடையே சீதையின் காதலன் கோலம் போட மறந்து விட்டான் போலும் வானம் கொஞ்சம் நீலத்தை களவு கொடுத்துவிட்டு மஞ்சளை கடன் வாங்கியிருந்தான் இன்னும் சில நிமிடங்களில் மஞ்சளும் கருப்பும் கை மாறும் வீடு நோக்கி முக்கோண வடிவத்தில் பறவைகள் எல்லாரையும் உறங்க சொல்லும் நான் கேட்பது நாளைக்கு உணவில்லை என்றென்ன அதற்கு கவலை இல்லை விடியலில் இறை தேட சிறகு விரிக்கும் மனதை தாரும் அனைவருக்கும் தினம் விரிப்போம் சிறகை
இயற்கையை தவிர இல்லையொன்றும் எழுத வெகு காலம் பிரிந்து பின் சேரும் கனவு கருப்பு வெள்ளை மனம் சொல்லும் போது மழை தூறல் வந்தால் இருப்பதே பிரிவு வேர் கண்ட பின்னே பழம் இனித்தது என்ன இது கொடுமை

மியாவ் மியாவ்

உன் பாதையை நீ மாற்றாத வரை பின் நோக்க வேண்டிய கட்டாயம் இல்லை - சாலை விதி வேகம் அதிகரிக்க கட்டை வண்டியும் காளை மாடும் களவு போனது - விருட்டென்ற பயணம் முழுவதுமாய் எரிந்து விட்ட தீக்குச்சி ஒன்று உன்னை பார்த்து சொல்லட்டும் முட்டாள் என்று ஏற்றுக்கொள் - தப்பே இல்லை முக்கால் மணி நேரம் மூங்கில் தழை வேய்ந்த கட்டாந்தரை போதும் - வேனல் காலம் படிக்க ஒரு வரி , பண்ணை மரத்தடி, மலை கூடும் கட்டி ஒலி நான் இன்னமும் கேக்கிறேன் அவள் பாத கொலுசொலி - கண்மணி

இன்றைய காட்சி

தப்புக்கு ஆடவில்லை தலைவிதியாய் ஒரு முடவனின் நடை பயணம் பளபளப்பில் மேயவில்லை பட்டினியால் ஒரு சுவரொட்டியை புசிக்கும் ஆட்டுக்குட்டி பங்குனியில் உத்திரம் கானல் நீர் குளியல் கூழ் ஊற்றும் கோயில் மத்தளத்தில் ஆட்டம் இன்றைய காட்சி

ஒரு வெக்கை காடு

கிள்ளியது கண்ணமில்லை வற்றிப்போன சிறு குடல்தான் சோகமாக அந்த மதி முகத்தை பார்க்க கோணாமல் மலைகளினால் முக்காடு போட்டுக்கொண்டான் ஆதவனும் கால்கிலோ அரிசி வாங்கி வா என அவன் காதில் விழ கலராக கண் விழிகள் கடைத்தெரு நோக்கி ஓட்டம் ஓடின

நகர் வலம்

அதிகாலை சேவல் இல்லை மழை பெய்த வாசல் இல்லை புள்ளி வைத்த கோலம் இல்லை விடிந்ததெல்லாம் பேப்பர் காரருக்கும் பால் காரருக்கும் நாயர் கடை பாய்லருக்கும்

மதிமுகம்

விதை ஏதும் உறங்காதே விளைவுகளும் உறங்காதே - பொன்மானே அறுவடையை மறக்காமல் வயலோரம் நீர் இரைத்தால் போகம் இருக்குமடி போனி நிரந்தரமா - கலைமானே கெஞ்சி கேட்டேன் வஞ்சம் போதுமடி வண்ணம் ஏழு தானே உந்தன் கண்ணம் காட்டுதடி பல நூறு ஓவியங்கள் - புள்ளி மானே

கிழக்கு

சாலை ஓரம் ஒரு காலை வேளை நெஞ்சை உருக்கிவிட்டு கந்தல் ஆடையிலே கனத்து முணுமுணுத்தால் மேக கூட்டமெல்லாம் மெல்ல மழை தருமோ சின்ன கண்கள் குளமாகி வரப்பில் வழிய கண்டேன் நீர் தெளித்து பல நாளிருக்கும் இவள் பெற்ற வரமிதுவோ வெற்று காகிதத்தில் வேதனையை தெளித்து வைத்தேன்

கண்ணீர் புறா

ஒரு உச்சி வெயில் சுட்டெரிக்கும் ஆதவனின் புன்னகையின் சாட்சியோடு ஒரு பத்து நிமிட போராட்ட காட்சி கானல் நீரை எனக்கு காட்டி கொண்டே இருந்தே தார் சாலையின் ஓரத்தில் கிழிந்த அங்கிகளுடன் ஒரு ஒன்றரை வயது பிஞ்சு குழந்தையுடன் நகர்ந்து வந்து கொண்டிருந்தாள் சற்று வந்தவுடன் ஒரு மறைவில் அவனை தூக்கி பிடித்துவிட்டு இறக்கி விட்டாள் அவள் தனியே தன்னை தூய்மை படுத்தி கொண்டு குழந்தையின் பிஞ்சு கைகளை பற்றிக்கொண்டு நடக்கலானால் அவளால் கூட நடக்க முடியவில்லை அவன் தனது வறண்டு போன இரண்டு கண்களையும் வேடிக்கை பார்க்க உருட்டி கொண்டே விருட்டென நடந்து கொண்டிருந்தான் அவள் முகத்தில் அடுத்த வேளை உணவுக்குண்டான கவலை கண்டேன் ஆனால் பிறை முகத்தில் ஒரு கலங்கமும் இல்லை அவள் நடையில் கடந்து வந்த கணங்களை கண்டேன் ஆனால் பால் நடையில் புதுமை கண்டேன் அவன் தார் சாலையின் வெப்பத்திற்கு புதியவனாய் , வெப்பம் தாளாமல் தன் பிஞ்சு கால்களை வேகமாக எடுத்து வைக்க அவளை முந்தியே சில நேரங்களில் சட்டென்று நின்று தன்னை மடியில் தூக்குமாறு கெஞ்சியும் பார்த்தான் அவன் அன்னையும் முயற்சித்தால் துணியே அணியாத இந்த பச்சிளம் குழந்தை

வாகன வசதி

விருட்டென்று பயணம் இமைக்கும் நேரத்தில் இலக்கு தினம் தினம் ஒரு சதவிகித நெரிசல் எப்பொழுதாவது எச்சரிக்கை பலகை

வாழை மரம்

கடல் அலைகளின் அழகிலே கண்களை அதன் கர்ச்சனையின் காதிலே கொடூரம் மென்மேலும் கடற்கரை மணலிலே மதம் மாறும் வரை கவனம் நடு இரவிலே தகும் தந்த வான் என் மிகும் என்றதால்

பகைவா

வெள்ளன நித்திரை விடியலில் தூக்கம் கனவுகள் கடை போட மலர்கள் மணம் வீசும் வடி நீரின் கடைக் கோடி துகள் வாசம் வீசும் இளஞ்சிவப்பு ஒளி வட்டம் திரை தாண்டி கோலம் போடும் அவளை நினைக்காமல் ஒரு காலை அது இனிதாக இருக்காதோ இது போல

நிலா காய்கிறது

மயிலாட்டத்திற்கு கடைசியாக நுழைவு சீட்டு வாங்கி வந்தாள் மழை சேவலின் கச்சேரிக்கு முதலிலேயே நுழைவு சீட்டை வாங்கி வந்தான் ஆதவன் அன்று மொத்தமே இரண்டுக்குமே விற்று போனது ஒரே இருக்கை மட்டுமே

சொட்டு நீர்

வெற்றிலை கொடி அன்புடன் தழுவிய தென்னையின் மடி அதன் ஓலையின் நுனி தூக்கநான்குருவியின் குடில் காற்றில் பறக்க மனம் பதைக்கும் நேரம் கிடைத்தால் பாருங்கள் வாழ்க்கையின் போராட்டம் விதை விடிவதற்குள் முளைப்பதில்லை ஆனால் விடியலில் தான் முளைத்திருக்கும்

வாங்கி

புவி தேடி உழன்றாலும் ஊர் கூடி ஓதினாலும் உன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க முடியாதய்யா

உயிர்(ல்)

வெள்ளை மாளிகை பச்சை காகம் மிகையாகாது விடை பெற்று போனாய் உன் சங்கடங்கள் யாவும் இங்கே சங்கீதங்கள் ஆகி என் துயில் கொள்ளும் காலை வேளை மின்னிய போதெல்லாம் பொன்னென்று அறியேன் அதன் இன்னலும் அறியேன் என்னை கலசத்தில் ஏற்றி வைத்தாய் கால் நூற்றாண்டு கதையெல்லாம் வெறும் காகிதத்தில் கண்டறிந்தேன் வெட்கத்தை விட்டு சில மணி நேரம் மழை சாரலில் நனைந்து விட்டேன் தேங்கிய வெள்ளம் கண்களினூடே வரப்பெல்லாம் நீல நாரை நடை பயில இங்கிருந்து துவங்குகிறேன் உன் கங்கணங்கள் யாவும் என் லட்சியங்கள் விழுதான சகோதரனே உன்னை மறு ஜென்மம் மகனாய் பெற புண்ணியம் என்ன செய்ய என் உயில் எழுதி முடிக்குமுன்னே உன் விதை என்றும் கண்ணுக்குள்ளே என்னை வழி நடத்து வீட்டு திண்ணை குருவே நீ பட்ட காயம் , அவமானம் , துயரம் யாவும் நான் மறக்காமல் என்னை நினைவுறுத்து என் சகோதரா விட்டில் பூச்சி போல இருந்த என்னை தழல் கொள்ள செய்தாய் உன் எழுத்து பிழைகளால் என் வாழ்க்கை பிழைகளை உணர்த்திவிட்டாய் எட்டாம் வகுப்பு எனக்கு எட்டவில்லை விழிக்கும் வரை அல்ல நான் கேட்பது விண்ணை பிளக்கும் வரை நிதர்ஷணம் நிலை பெரும் ஒரு உன்னதமான உள் கட்டமைப்பு வி