Skip to main content

Posts

Showing posts from 2019

கூச் கூச் வண்டி

  எதுவாக இருந்தாலும் இயல்பாக கடந்து போகும் , போக்கான  நிலையை நானும் கொஞ்ச நாளாய் மறந்துவிட்டேன் கொஞ்சம் இடமின்றி பயணத்தின் தடமின்றி கனவுகளில் நிறமின்றி நானும் உன்னை விலகுகிறேன் மனமின்றி தேடலை மனம் விரும்பவில்லை இருந்தும் விட்டு விலகவுமில்லை வேடிக்கையில் வெல்ல முடியாது உன்னை வெட்கத்தில் அல்ல கோபத்தில் வெல்ல முடியாது உன்னை குழைவதில் அல்ல நிதானமாய் ஒரு ஆன்மீக பிரவேசம்

தவம்

வெள்ளை நீராவி கோலம் அதை மெல்ல திறந்து காணும் ஆர்வம் - அதை கொண்டேன் யானும் ஒரு சாலை சந்திப்பில் அருகில் நின்ற வாகனத்தில் ஒரு குழந்தை பாட்டு அது மெல்ல என்னை பார்த்து திருப்பி கொண்டதாய் நினைத்து என்னையும் செய்ய சொன்னால்  தவம் அதன் பெயர் 

டங்ஷ்டன் பாலைவனம்

மழைக்காக ஒதுங்கவில்லை மழையென்று ஒதுங்கி நின்றேன் மின்னல் கண்களில் பூக்க கண்டேன்  சாரல் சன்னலை தாண்டவில்லை படகெல்லாம் கரைகளை சேரவில்லை வானம் இன்னமும் அவ்வப்போது மத்தளம் இட்டது மண் வாசனை நினைவில் உள்ளது அதை மறவாமல் நடையை கட்டினேன் ஒரு ரோஜா பாலைவனத்தை  நோக்கி

குழைந்தேன்

கொஞ்சமாய் எடுத்து வைத்த கொப்பரை மனமும் செக்குக்கு இளைப்பாற ஒதுங்காத உன் பார்வை அதில் ஒன்றாமல் இருக்க என்னால் கலங்காத கடல் உப்பாய் உவர்த்தாலும் உள்ளங்கையால் முழுக்க கன்னம்தான் கொஞ்சம் மறைக்க சிவந்தால் என்ன நான் சிலையாக இன்னும் கொஞ்ச காலம் நிலைக்க

கொள்ளை இடம்

வெள்ளை கனா  கருப்பு கோவில் காலை கோலம் நடுனிசி நாய்கள் யாவர்க்கும் தெரியும் உனக்கும் தெரியும் சிலேடைகள் கொஞ்சம் எமக்கும் புரியும்  புன் சிரிப்பில் பிறவாத காதல் ஒன்று கண் ஓரம் வழியுதடி 

மகானல்ல

உவமை கூற போயுளறல்   கொட்டி உள்ளதாய் எண்ணி உள்ளந்தான் ஊர்  சுற்றி திரிந்து  கருப்பு வெள்ளை அம்புகளினால் சிவப்பாய் கீறி  அகந்தை கொண்டு அவ்வளவாக தெரியாமல்  அவளோடு ஒரே சிறையில் நான் மட்டும் கைதியாக

கள்ளம்

கதை எழுதலாம் என நானும் கொஞ்சம் எண்ணி அகல் விளக்கொன்றை அருகில் ஏற்றி அதன் விளம்பர ஒளியில் கொஞ்சம் வெள்ளை காகிதம் கொண்டு பிரதிபலிப்பு செய்ய என் கண்களும் அன்று கலவரம் செய்ய கலியுகம் எல்லாம் ஒன்றாய் கூட வனம் வரும் செயல் வயல் வரை மடை மனதினுள் மலர் கொடியெல்லாம் அவள் என நீண்டு கொண்டே போனதாய் தெளிய கற்பனைகளை கடல் உப்பெனும் அளவு சமைத்து பார்த்தேன்

சிற்பியின் சிலை

சிற்பியை வடிக்கும் சிலைகளை காணும் வரம் போதும் நாளும் கலைகளை யானும் கற்றதில்லை  என்றும் ரசனைகள் தானோ யான்  கற்ற பாடம் நெஞ்சம் கொண்டு கீரும் கத்தி ஒன்றும் வேண்டாம் உந்தன்  ஒரு விழி போதும் அதன் மயக்கமும் தீரும் வெண்ணிலவை காணும் கண்ணங்கள் யாவும் அதன் வெட்கத்தை தேடும் வழி தடுமாறும் 

Bad Sculpture

விழி கொண்டு செதுக்கும்  பேசவும் தெரிந்த சிலைகளின் கபடம் ஒரு காவியம் படம் முழுக்க காடு அதில் அசையாத ஒரு மான் அதன் சிரசில் ஒரு வண்டு முறுக்கானது நாண்தான் அதன் பலன் என்றும்  வில் தான் மனம் கூட அந்த வில் தான் உன் முறைப்பென்றும் என் பலன் தானே அடியே அதில் கொஞ்சம் ரணம் பூசு வானம் என்றும் ஜன்னல் காற்று https://www.amazon.in/dp/B07JL4FDWV

தீபம் ஏறு

அவள் முற்றம்  நான் முற்றும் ஒரு கவலை கொண்ட மான் ஒரு வேளை ஒரு மாலை பிற்பாடு பலமான பூங்காற்று வரமுண்டோ இல்லை வழக்குண்டோ பிரிந்து உட் கொள்ள அன்னமில்லை என்னோடு அதுகாதம் அளவோடு உலாவி சேர்த்து வைப்போம் நினைவுகளை கனவுகளின் நிழலோடு ஒரு கோட்டையின் அஸ்திவாரம்

தள்ளிப்போகாதே

அவளின் பார்வை பல வாறு போர் செய்ய பெரும் பாடு புரிந்துகொள்ள அன்னமில்லை என்னோடு கொஞ்சம் ஏங்கி தவித்தேன் நெஞ்சோடு களவு போனதெல்லாம் இரவோடு கனவுகளில் ஒரு கொள்ளை நிறம் கசக்கிய கண்களோடு சில புன்னகை பற்று என்னவளே என்னை ஆட்கொண்டாய் இன்றோடு சில நேரம் கிடைக்கும் சிற்பி சிலையின் கலை யாவும் எந்தன் கண்களோடு

சிறப்பான சம்பவம்

இறகில்லை இருந்தாலும் மனம் போகும் மதி போதும் இனி பித்தம் தலைக்கேறும் சிலை தானே சில காலம் விழி யூடே விளையாட்டு கலை யாவும் கதை சொல்லும் ஒரு நெடிய மலை பாதை பாம்பாட்டி யோடு கொஞ்ச காலம் இன்னும் கொஞ்ச காலம் அதனிலும் இடை படாதே

இன்னொரு மைல்

முடிவுக்கு அல்ல  முயற்சிக்கவே வீழ்கிறது - அருவி பணிந்து விட அல்ல பரப்பி விடவே வளைகிறது - நாணல் சோகத்தை கொட்டி தீர்க்க அல்ல சோலைகளை எழுப்பவே அழுகிறது - வானம் நாளை எழுவோம் என்றே இன்று விழுங்கள் - ஆதரிப்பான் ஆதவன்

எப்போ கேட்டது

மனம் போனது மலர் வளையம் வைத்து விட்டு பின்னே போய் தூவி விட்டேன் மேடையில் கரை கடக்காத குளங்கள் அங்கங்கே தெரிந்தன இருட்டு என்ன செய்யும் மலை கோயில் மணியிடம் கேட்பவர் கேட்கட்டும்

முதல் பயணம்

கலன் போகும் தூரம் கடல் சென்று நீளும் அதன் மனம் கோணி போனால் நீர் வந்து சேரும் ஆடி கூத்தாடி அடி வயிறு கொஞ்சம் இசைக்கும் நெஞ்சில் மட்டும் கொஞ்சம் எடை கூடும் இருந்தும் துடுப்பு மட்டும் தொடர்ந்து வரும் கூடவே இடையிடையே வருடி போக நினைவு வரும் எல்லோருக்கும் இது முதல் பயணம் அவ்வளவு தானடா வாழ்க்கை அள்ளி கொண்டு போவோம் அன்பை

பகல் இரவு

பகலெல்லாம் ஒரு கனவு கனவெல்லாம் ஒரு கவிதை கவிதையெல்லாம் ஒரு காவியம் காவியமெல்லாம் ஒரு தலைவி தலைவியின் பார்வையெல்லாம் ஒரு கள்ளம் பார்வையின் கண்ணமெல்லாம் ஒரு கோபம் கோபமெல்லாம் என்னை ஆட்கொள்ள கொண்டதெல்லாம் அவள் நினைவே நினைவெல்லாம் கனவாய் இரவில்

நிழல் ஓவியம்

உன் நிழலோடு  ஒரு நாள் ஆள் மாறாட்டம்  செய்யலாம் என்று  ஒரு ஒப்பந்தம்  அதற்க்கு மாறாய்  என் கனவுகளுக்குள் நிஜத்தை  என் கல்லறை வரை  அனுமதித்தேன்  கவிதைகளிலும் ததும்பி  நிற்க இப்போது நினைவுகளை  தப்பி நடக்கிறேன்  மூச்சு காற்றுக்குள்  புதைந்து விட்ட  என்னை தேடி  உன்னுடன் பயணத்தை  தொடர்கிறேன்  கை  கோர்த்து  கதை பேசி  ஒரு வசந்த காலம் 

மல(ழை)

முந்தி செல்லும் கால்கள்  கொஞ்சம்  பிண்ணி கொல்லும் வயிறு  இலகுவாக காற்றில் பறக்கும் சட்டை பை இயல்பிலே தொலைந்து போன இரக்கம் தள்ளி போகும் உறவு  தாக்கு பிடிக்கும் நட்பு வெல்ல துடிக்கும் கனவு அலட்சியம் செய்யும் அலைகள்  சூழ்ச்சி செய்யும் சூழல் மழை பெய்ய மறுக்கும் வானம் சிரித்து வை

கொடும் கூற்று

நிழலை காட்டி நிறம் சொல்ல கூறும் பொல்லாத கண்களின்-சிவந்த காரீயம் மனம் கொண்ட பூதம் மலர் கொள்ள ஏங்கி வனம் கொள்ளும் முன்பு வழி கேட்டு நிற்க திசை எங்கும் வெள்ளம் அதன் கரை எங்கும் கள்ளம் அதில் படகென்ன செய்யும் மழை வரும் வரை கொஞ்சம் செல்லும் மனம் தான் அது கொஞ்சம் மறவாதது

மேகமாய் அவள்

இருளில் மறைவாய் இதழில் மடிவாய்  இமைக்கா தருணம் இயல்பாய் ஒரு மழையாய் கடவுள் தொழுகை கனவாய் ஒரு கவிதை மெழுகின் வரம்தான் மேனி வதனம் கணுக்கள் தோறும் கடத்தி சென்று பூக்கள் உவகை கொள்வது ஏனோ மயக்கம் என்ன தயக்கம் என்ன  காலை என்றும் விடிந்து விடும் இறப்பும் வரும் பிறப்பும் வரும் கணக்கை கான கடல்  கண்ணீர் போதும் மனம் கூட ஒப்புவிப்பாய் மகள்களை என்றும் வீரம்  கொண்டதாய் எண்ணி வைப்பாய்