Skip to main content

மேகமாய் அவள்

https://drive.google.com/uc?export=view&id=16Oavexkbatm3sAH47tNV6etgVSZoMm1z

இருளில் மறைவாய்
இதழில் மடிவாய் 

இமைக்கா தருணம்
இயல்பாய் ஒரு மழையாய்

கடவுள் தொழுகை
கனவாய் ஒரு கவிதை

மெழுகின் வரம்தான்
மேனி வதனம்

கணுக்கள் தோறும்
கடத்தி சென்று பூக்கள்
உவகை கொள்வது ஏனோ

மயக்கம் என்ன
தயக்கம் என்ன 
காலை என்றும் விடிந்து விடும்

இறப்பும் வரும் பிறப்பும் வரும்
கணக்கை கான கடல் 
கண்ணீர் போதும்

மனம் கூட ஒப்புவிப்பாய்
மகள்களை என்றும் வீரம் 
கொண்டதாய் எண்ணி வைப்பாய் 

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்