Skip to main content

Posts

Showing posts from July, 2018

நீர்க்கோலம்

கொள்ளிடக் கரை ஓரத்திலே குமரிகள் கண்டம் ஓடிக் கொண்டே உறங்கி கொள்ளும் ஆற்று வெள்ளம் அதன் ஆடை வீழ்ச்சிகளில் வானம் கூட ஏழு வண்ணம் பெருக்கெடுத்து சில தூரம் கோபம் கொள்ளும் பெரும்பாலும் வழி நெடுக பச்சை வாசம் கொள்ளும் தொழிற்சாலை கோரை பற்கள் தொடும் போது துரதிர்ஷ்டம் பின்னது பாயும் நிலமெங்கே காய்த்து தொங்கும் அது ஒரு நீர்க்கோலம்

கள்வனின் காதலி

திரும்பிய போது திசை மாறி போன மழை சாரல் ஓடம் தெருவின் பின் குறிப்பில் ஒன்றி போன வணிக விளம்பரம் ஆடி தள்ளுபடியின் இலவசத்தில் மலைத்து போன ஆனந்தங்கள் நேர் நேர் தேமா கொஞ்சம் குனிந்து பாருங்கள் நாங்களும் மனிதர்களே நடை பாதை நன்னிலம் தான் எங்கள் வீடு

சாரல் மழை மேகம்

நடை பாதை கூட கொஞ்சம் நகர்ந்து விட்டது சந்திரனும் கூட கோபம் கொண்டது மேகம் கூட கலங்கிவிட்டது காபி கூட கசந்து விட்டது விண்மீன்கள் கூட விரைந்து விட்டது ஒன்றே தான் உள்ளம் அறியேன் காவல் கொள்ளை காலம் கூட அறியேன் மின்னல் தானே முன்னாடி இடி எப்போதும் பின்னாடி பார்வை ஒன்றே போதுமடி பார்ப்போம் இடிக்குமா யென்று

கடவுச்சொல்

அமைதியாய் என்றே - பேசாதே என்றில்லை அன்பாய் என்றே - கோபிக்காதே என்றில்லை ஆசைப்படாதே என்றே - வெறுப்பாய் என்றில்லை சிரிக்காதே என்றே - முறைப்பாய் என்றில்லை கனவு என்றே - உறங்கேன் என்றில்லை விழிப்பாய் என்றே - உணர்வாய் என்றில்லை கடப்பாய் என்றே - மறவேன் என்றில்லை மனதால் என்றே - காமமில்லை என்றில்லை ஒளிதான் என்றே - ஒளித்து வை என்றில்லை கவிதை என்றே - காவியத் தலைவி என்றில்லை