Skip to main content

Posts

Showing posts from October, 2017

இயற்கை சாட்சி

சாலையின் ஓரமெல்லாம் சில தூரல்கள் ஒன்று கூடி ஓடங்கள் உருவாக்கி கலையாத குப்பையெல்லாம் கப்பலாக மிதக்க விட்டு கடலில் சேர்க்க முனைந்ததுவே காரிருள் மேகமொன்று இதைக்கான தனக்கான நிறத்தையும் இழந்ததுவே வனத்துக்குள்ளே வந்ததுபோல் மரமெல்லாம் மகிழ்ந்தனவே துப்பரவுக்கு வேலை மிச்சம் ஒரு அதிகாலை சாட்சியாக குடையோடு கை குலுக்கி சென்றேன்

சில்லறை பூக்கள்

பால் மணமி ல்லா பாலைவன பொம்மை புன் சிரிப்பில் பரிகசிக்க பசியோடு தாகம் கண்ணில் சொருகுதடி மனதில் கணம் கூடுதடி கண்ண குழிகளிலே நீரோடை இருந்ததற்கு உப்பு நீர் சுவடுகள் உள்ளதடி கண்ணீர் கூட கடனானதடி மெய்யான தீபாவளி ஆடைகளை பொத்தலோடு போர்த்தியிருந்த காட்சியடி நிர்வாணம் நானானேன் பாழ்பட்ட காலணிகள் சேராத சோடியிலே பாதங்களாய் எண்ணி பார்த்தேன் நெருடல்கள் நெஞ்சுக்குள்ளே நீங்காமல் நிறைகிறதே கரை புரண்ட கங்கை நதி கண்ணில் மட்டும் போதாது ஆண்டவரே ஏன் இப்படி என்றெல்லாம் எண்ணுவதும் , சாபமென்று கூறுவதும் கடவுள்கள் வேலை சிறிதேனும் மனிதம் செய்வோம்

நடையில் கிழார்

காலியான சட்டைப்பையின் சுவடு முகத்தின் ஓரத்தில் ஒளிந்திருக்க நடையை வேகம் கூட்டினார் , பாலு . இந்த சாலையின் வேகத்தில் சில நேரங்களில் தடுமாறிப்போயிருக்கிறார். விர்ரென்று ஒரு மகிழுந்து அதன் திரையை விலக்கி உரிமையாளரை காட்டியது தயக்கமான உரையில் வழி கேக்க, பெரும்பாலும் வாகனங்கள் வழி கேட்பது காலாற நடப்பவனிடம்தான் ஒரே சைகையில் வழி காட்டி விட்டு நகர்ந்தார் பாலு . வந்தவர் வழி கேட்டதும் , இப்போது பாலு பயணப்பட்டிருப்பதும் ஒரே இடம் தான் ...

வெர்னியர் காளிப்பர்

கடல் வானம் நிறம் மாறும் வரை கரை ஓரம் காத்திருந்தேன் கப்பல் கட்டும் தளமொன்று கட்டெரும்பாய் கண்ணில் பட சில நேரம் சிறு வண்டாய் கண்களை துருவி பார்த்தேன் வானத்தில் வெள்ளையிலே பொட்டொன்று மெதுவாக மலர்ந்தது கண்டு சில நேரம் என் பார்வையை திருப்பி விட்டேன் செய்தி ஒன்றுமில்லையடி சில நேர அனுபவத்தை மையிட்டு மடக்கி வைத்தேன்

காற்றில் விதை

நந்தவனம் கடந்துவிட்டேன் கொள்ளிடை காட்டுக்குள்ளே பந்தமிட்டு நடு இரவில் ஓராயிரம் ஓலங்களில் சப்தமில்லா நடுக்கத்தில் நித்திரையை தொலைத்துவிட்டேன் ஒத்தையடி பாதையடி ஒய்யாரம் இல்லையடி  நடு நடுவே திக்குற்றேன் கூட வருவது யாரென்று கேட்டுக்கொண்டே அழகான திருப்புமுனை  அதன் நடு வாயில் பச்சை பட்டாடை அதன் வனப்பினிலே  விழி இரண்டை விதைத்து வைத்தேன் காய் மட்டும் புளிக்குமடி இங்கு கனிகூட விலக்கில்லை பசியாற உண்டபின்பு  தீ மூட்டி நித்திரையில் மையலுற்றேன் விடிந்த போது வீட்டின்  படுக்கையறை கண்ணாடியில்  பூதம் கண்டேன் கனவெல்லாம் கருப்பு வெள்ளை  நிறம் தெரிந்தால் என்ன செய்ய