Skip to main content

நடையில் கிழார்

காலியான சட்டைப்பையின்
சுவடு முகத்தின் ஓரத்தில்
ஒளிந்திருக்க நடையை வேகம்
கூட்டினார் , பாலு .

இந்த சாலையின் வேகத்தில்
சில நேரங்களில் தடுமாறிப்போயிருக்கிறார்.

விர்ரென்று ஒரு மகிழுந்து அதன் திரையை
விலக்கி உரிமையாளரை காட்டியது

தயக்கமான உரையில் வழி கேக்க,
பெரும்பாலும் வாகனங்கள் வழி
கேட்பது காலாற நடப்பவனிடம்தான்

ஒரே சைகையில் வழி காட்டி விட்டு
நகர்ந்தார் பாலு .

வந்தவர் வழி கேட்டதும் , இப்போது
பாலு பயணப்பட்டிருப்பதும்
ஒரே இடம் தான் ...

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்