Skip to main content

மென்பொருள்

இனியும்
இதையும்
கொஞ்சம்
களைந்தே நடந்தேன்

நிழலும் நினைவும் ஒன்றாய்
விலக
அடுத்தடுத்து ஆழம் கொள்ள

மை எல்லாம் மனம் போல
வண்ணங்களால்
கோலமிட்டேன்

புள்ளிகளுக்குள் புதைந்து
போன
வரிகளை கொஞ்சம் வாசித்து
பாரேன்

வழிகளில் முள்ளும்
வரிகளில் சொல்லும்
கொஞ்சம் ஒத்தே போகும்

நிலை கண்டேன்
உன் நிழல் கண்டேன்
கலை எல்லாம் கடன்
வாங்கி வந்திருந்தாய்

சொல் எங்கே சுகம் எங்கே
மனம் எங்கே மயக்கம் எங்கே

Comments

Popular posts from this blog

நீலமாய் கடலொன்றை

விலக்கினால் விலகலாம் வலியெல்லாம் தாங்குமா உன் இதயம்தான் அதன் சுவர்களே வெளிப்பூச்சம்மா கனவுகள் களையலாம் கவிதைகள் நெருடுதே உயிர்வரை குழம்பினேன் தவறென்ன தவறினேன் தலையணை வெறுமையே தலைக்கணம் ஒதுக்கினேன் நீலமாய் கடலொன்றை நெஞ்சுக்குள்ளே காண்கிறேன் உயிர்வரை உவர்க்குதே உறக்கத்தில் உளறினேன் உன் தனிமையை கேட்டுத்தான் என் இளமையும் தவிக்குதே நடப்பதை ரசிகனாய் எனக்குள்ளே நடிக்கிறேன் நடனங்கள் இடைவெளி கடக்கையில் வியக்கிறேன்

மின்மினி

நிலவோடு ஒரு நாளை கடக்காமல் விரியாது என் படுக்கை பகல்போல் வெளிச்சம் கண்டேன் பல காலம் நிறங்கள் கண்டேன் இடயிடையே இலக்கம் கண்டேன் ஒன்றுமொன்றுமாய் மயக்கம் கொண்டேன் கதவோடு மறையாதே சன்னல்கள் மறுக்காதே சேவலோடு கடைத் தெருவும் கூவி விட்டது உணர்ந்துவிட்டேன் உளரிவிட்டேன் உறவெல்லாம் ஒன்றாய் சேர்க்கும் உபாயம் கண்டு விட்டேன் கலாபம் ஏந்தி நிற்க்கும் கனாவில் விண்மீன்கள் நீந்தி போகும் மின்மினியாய் வேடிக்கை பார்த்தேன்