Skip to main content

மின்மினி

https://drive.google.com/uc?export=view&id=17ymcGzyZQ_LG4Le0Aq7Rm7K4CPoZMzvl

நிலவோடு ஒரு நாளை கடக்காமல்
விரியாது என் படுக்கை
பகல்போல் வெளிச்சம் கண்டேன்
பல காலம் நிறங்கள் கண்டேன்
இடயிடையே இலக்கம் கண்டேன்
ஒன்றுமொன்றுமாய் மயக்கம் கொண்டேன்
கதவோடு மறையாதே சன்னல்கள் மறுக்காதே
சேவலோடு கடைத் தெருவும் கூவி விட்டது
உணர்ந்துவிட்டேன் உளரிவிட்டேன்
உறவெல்லாம் ஒன்றாய் சேர்க்கும்
உபாயம் கண்டு விட்டேன் கலாபம் ஏந்தி நிற்க்கும்
கனாவில் விண்மீன்கள் நீந்தி போகும்
மின்மினியாய் வேடிக்கை பார்த்தேன்

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

சில நேரங்களில் பெரும்பாலும்

மழையும் இசையும் மனதை நனைத்து விட்டு செல்லும் வெள்ளபெருக்கு சில நேரங்களில் வெளியில் தெரிந்து விடும் வடிந்த நீர் சில நேரங்களில் வயல்களில் பாயும் கன்னத்தில் விளைச்சல் சில நேரங்களில் அதிகமாக இருக்கும் அறுவடை காலம் பெரும்பாலும் காலனுடைய சாட்சியம் இல்லாமல் இருக்கும்