Skip to main content

Posts

Showing posts from October, 2018

சிற்பம்

கண்ணாடி ஓடு ஒரு கற்றை நிலவு ஓராயிரம் மின்னல் மனதிலுன் பிம்பம் கூச்செரியும் ரோமம் அங்கங்கே அலை உருவாகும் மனம் சில நேரம் பயணப்பட்டிருக்கும் அது ஒரு மழையில் அமிழாத மழலை காதல் கப்பல்

கத்திரி பூக்கள்

உந்தன் பெயர் கூட அறியாமல் ஒரு கோடி கடிதங்கள் உந்தன் இமைக்காத கண்கள்தான் அதன் முகவரி பக்கங்கள் மொழி கொஞ்சம் விளங்காமல் பரிமாற்றம் செய்ய வந்தேன் பல நாட்கள் இடி மின்னல் என் ஜன்னல் ஓரம் மழை சாரல் பரிமாற்றம் விளங்கவில்லை ஆனால் முகவரியில் மாற்றமில்லை சிலை போல காணவில்லை ஆனால் சில காலம் ஒவியனாய் வேடமிட்டென் விழும் மழை கூட புன்னகைத்தான் விளையாடு மாலை ஆச்சு மணம் கொண்ட மலர் எல்லாம் மனம் கொய்வதில்லை சில வெல்லாம் ஓரமாய் தூரமாய் கொள்ளை கொள்ளும் அவைக்காக அவளுக்காக