Skip to main content

Posts

Showing posts from March, 2018

இன்றைய காட்சி

தப்புக்கு ஆடவில்லை தலைவிதியாய் ஒரு முடவனின் நடை பயணம் பளபளப்பில் மேயவில்லை பட்டினியால் ஒரு சுவரொட்டியை புசிக்கும் ஆட்டுக்குட்டி பங்குனியில் உத்திரம் கானல் நீர் குளியல் கூழ் ஊற்றும் கோயில் மத்தளத்தில் ஆட்டம் இன்றைய காட்சி

ஒரு வெக்கை காடு

கிள்ளியது கண்ணமில்லை வற்றிப்போன சிறு குடல்தான் சோகமாக அந்த மதி முகத்தை பார்க்க கோணாமல் மலைகளினால் முக்காடு போட்டுக்கொண்டான் ஆதவனும் கால்கிலோ அரிசி வாங்கி வா என அவன் காதில் விழ கலராக கண் விழிகள் கடைத்தெரு நோக்கி ஓட்டம் ஓடின

நகர் வலம்

அதிகாலை சேவல் இல்லை மழை பெய்த வாசல் இல்லை புள்ளி வைத்த கோலம் இல்லை விடிந்ததெல்லாம் பேப்பர் காரருக்கும் பால் காரருக்கும் நாயர் கடை பாய்லருக்கும்

மதிமுகம்

விதை ஏதும் உறங்காதே விளைவுகளும் உறங்காதே - பொன்மானே அறுவடையை மறக்காமல் வயலோரம் நீர் இரைத்தால் போகம் இருக்குமடி போனி நிரந்தரமா - கலைமானே கெஞ்சி கேட்டேன் வஞ்சம் போதுமடி வண்ணம் ஏழு தானே உந்தன் கண்ணம் காட்டுதடி பல நூறு ஓவியங்கள் - புள்ளி மானே

கிழக்கு

சாலை ஓரம் ஒரு காலை வேளை நெஞ்சை உருக்கிவிட்டு கந்தல் ஆடையிலே கனத்து முணுமுணுத்தால் மேக கூட்டமெல்லாம் மெல்ல மழை தருமோ சின்ன கண்கள் குளமாகி வரப்பில் வழிய கண்டேன் நீர் தெளித்து பல நாளிருக்கும் இவள் பெற்ற வரமிதுவோ வெற்று காகிதத்தில் வேதனையை தெளித்து வைத்தேன்