Skip to main content

குளிக்க பயம்

கங்கையிலே கண் கலங்கினேன்
நடுநிசி சூரியனே
கொல்லென்று உமிழ்ந்து
தள்ளுகிறாய்
ஒரு படிக்கட்டு சாட்சி
பறவைகளோ வெந்நீர் குளியளில்

தள்ளாடியே பல கூட்டம்
விரக்தியில் சில கூட்டம்
விளிம்பில் சில கூட்டம்

கண் திரித்தேன் கா கா வென
ஒரு கூட்டம்

பின்னே தெரியாத மொழியில்
துதி பாடும் ஒரு கூட்டம்

கடவுளென சிறப்பு கட்டண
வழிபாட்டில் சில கூட்டம்

கர்வத்தில் கண் மறைந்த
சில கூட்டம்

அரிதாக இதற்கிடையே
கொல்லென சிரிக்கும்
பிஞ்சுக் கூட்டம்

கடவுள் இருக்க வாய்ப்பிருக்கு
கர்ப்ப கிரகத்தில் அல்ல
கண்டு கொள்

Comments

Popular posts from this blog

நானாகி போனேன்

நிழல் பிம்பங்களின் கனவுகளில் காலை வேளைகளை நிழல் கனவுகளின் பிம்பங்களில் மாலை வேளைகளை நெஞ்சோடு பிசகாமல் வைத்திருப்பேன் புகையாமல் நெருப்பாக உருகாதே பொன்மானே

மென்பொருள்

இனியும் இதையும் கொஞ்சம் களைந்தே நடந்தேன் நிழலும் நினைவும் ஒன்றாய் விலக அடுத்தடுத்து ஆழம் கொள்ள மை எல்லாம் மனம் போல வண்ணங்களால் கோலமிட்டேன் புள்ளிகளுக்குள் புதைந்து போன வரிகளை கொஞ்சம் வாசித்து பாரேன் வழிகளில் முள்ளும் வரிகளில் சொல்லும் கொஞ்சம் ஒத்தே போகும் நிலை கண்டேன் உன் நிழல் கண்டேன் கலை எல்லாம் கடன் வாங்கி வந்திருந்தாய் சொல் எங்கே சுகம் எங்கே மனம் எங்கே மயக்கம் எங்கே

இயல்பை தேடி

நீதியெ ன்பதையா னறியேன் என் அற்புதமே நீவீ ரறிகிலேன் கொன்று மதின்று மழித்தார் அதுகொ டிதென்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ நேர்மையும் வருமையும் சேர்ந்தே வளருவதனு ரமென்னவெ ன்று உரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ சாதியின் பெயரோ மதத்தின் பெயரோ மக்கி கிடக்கு மனதை கரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ முற்பி றவியும் பின்வரு வதுமென தண்டனைகளை நியாயப் படுத்துவதும் நியமிக்க மறந்தாயோ - அஃதில்லையோ அற்புதமே அனைத் தொதுங்குமா ற்றின் கரைகளை போலே இடித்துரைத்தா லென்ன பிறப்பேனி றப்பேனி டையிலே வந்துவ ந்தேபோ குமிந்த கலக்கமே நுன்றரைக்கம றந்தாயோ - அஃதில்லையோ உள்ளே தேடல் தொடரும்