Skip to main content

Posts

Showing posts from 2024

மழையில்லா வானவில்

இதைக் கொஞ்சம் நெஞ்சம் மறந்து போவதில்லை மயக்கங்களும் தயக்கங்களும் கலந்து போன தென்னை பார்வைகளும் வார்த்தைகளும் கடந்து போன துன்னை வைத்திருந்தேன் நினைவுகளில் இரவுகள் எனக் கில்லை வாங்கினேன் பகலிடம் இரவல் கனவுகள் அதிலில்லை இறுதிவரை இதைக் கொஞ்சம் நெஞ்சம் மறக்கப் போவதில்லை

கடைசி பென்ச்

நான் பாடங்கள் புதியாத வாய்ப்புகளின் வருசைகளில் கடைசி பக்கம் கனவுகளை கல் வெட்டுக்களாய் கவலைகளை தோழன் வசைகளினால் மறந்து வைப்போம் விடையோடு கேள்விகளும் புரியாமல் சில நேரம் தெளிவாக சொல்வதனால் என்ன குற்றம் தேறி விடலாம் இன்றில்லையெனில் 

சபதம்

 நல்லதோர் வீணை செய்தே அதை நலன் கெட புழுதியில் எறிவதுண்டோ சொல்லடி சிவ சக்தி எனை சுடர் மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் - பாரதி

பிரம்மம்

 ஒரு சாலை மழைக் காலம் சில தூரல் இசையோடு இயல்பாக குளிர் காயும்- காகம்  சிறகெல்லாம் மழைத் துளிகள் சளைக்காமல் உலர வைத்தாள் கரிய மேகம் மூட கண்டு சில நேரம் திகைத்து நின்றாள் மறக்காதே மரம் இருக்கு கொஞ்சம் குடை போலே - இருந்த்தாலும் பறந்த்தாலே மழை வந்ததும் சிறகடித்து